புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டு கழகத்தின் “டொல்பின் பிரீமியர் லீக்” 2024!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டு கழகமானது 8 வது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “டொல்பின் பிரிமியர் லீக்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வானது அக்கழகத்தின் தலைவர் திரு. சுதன் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக்கிண்ணத்தினையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்

கடந்த மூன்று நாட்களாக இடம் பெற்று வந்த இத்தொடரின் இறுதிச்சுற்றில் சன் ரைடர் மற்றும் அவேஞ்சர்ஸ் அணிகள் மோதியிருந்தன. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைடர் அணியினர் 08 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டத்தினை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவேஞ்சர்ஸ் அணியினர் 08 ஒவரகள் நிறைவில் 06 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு போட்டியினை சமநிலை படுத்தியிருந்தனர். இந்நிலையில் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது

அதில் அவேஞ்சர்ஸ் அணியினர் ஒரு ஓவர்கள் நிறைவில் 19 ஓட்டங்களை பெற்றதோடு எதிர்த்தாடிய சண் ரைடர்

அணியினர் ஒரு ஓவருக்கு 20 ஓட்டங்களை பெற்று டொல்பின் பிரீமியர் லீக் சுற்றின் இவ்வருடத்திற்கான சம்பியனாக வெற்றிவாகை சூடினர்.

இதன் போது இராஜாங்க அமைச்சருக்கு டொல்பின் விளையாட்டு கழகத்தினரால் வாழ்த்துப்பா ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் சிவராஜா, ஆலய பரிபாலன சபை தலைவர் தட்சணாமூர்த்தி, கண்ணகி மகா வித்தியாலய அதிபர் குலேந்திரராசா, மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் சிவகுமார், மண்முனைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் திரு சி. சுகந்தன், இளைஞர் சேவைகள் அதிகாரி விந்தியன்,

டொல்பின் விளையாட்டு கழகம் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகத்தினர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ