தேர்தல் விஞ்ஞாபனம் 2020
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - தேர்தல் விஞ்ஞாபனம் 2020
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கிழக்குத் தமிழகத்தின் நீடித்து நிலை பெறக்கூடிய வளமான எதிர்காலச் சுபீட்சத்துக்கான நம்பிக்கை கொள்கை பிரகடனம்
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020
- முன்னுரை
- அரசியல் கொள்கை
- காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள்
- விவசாயம்
- பழச்செய்கை
- நீர்ப்பாசனம்
- கால்நடை வளர்ப்பு
- மீன் பிடி
- பல்லாண்டுப் பயிர்ச்செய்கை
- தென்னைச்செய்கை
- மரமுந்திரிகை செய்கை
- பனைப்பயிர்
- காட்டுவளம்
- கைத்தொழில் துறை
- சுற்றுலாத்துறை
- சுகாதார சேவைகள்
- கல்வி
- வீடமைப்பு
- வீதிகளும் பாலங்களும்
- குடி நீர் வழங்கலும், சுகாதாரமும்
- மின்சாரம்
- போக்குவரத்து
- வறுமை ஒழிப்பு
- பெண்களின் ஆளுமை விருத்தியும், குழந்தைகள் பாதுகாப்பும்
- விளையாட்டு
- உள்ளுராட்சி நிர்வாகமும் பட்டண மயமாக்கலும்
- மாவட்ட நிர்வாகம்
- மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி
- பூர்வவீகக் குடிகள்
- பல்லாண்டுப் பயிர்ச்செய்கை
முன்னுரை
ஒரு சமுகம் ஆரோக்கியமாக இருக்கின்றதா என்பதனை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் அச்சமுகமானது பொருளாதாரம், கல்வி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கலை, கலாசாரம், உட்கட்டமைப்புக்கள், சுகாதாரம், சமுக அந்தஸ்த்து என்பவற்றில் அடைந்துள்ள முன்னேற்றமே ஆகும். அதேவேளை அச்சமுகத்தின் உரிமையும் முக்கியமானதாகும். எனவே ஒரு சமுகத்தின் அபிவிருத்தி அரசியலும், உரிமை அரசியலும் அச்சமுகத்திற்கு இரண்டு கண்கள் போன்றவை. எனவே அவை இரண்டும் ஒரே சீராக சமாந்தரமாக வளர்ச்சியடைவதால் மட்டுந்தான் அச்சமுகம் ஒரு ஆரோக்கியமான சமுகமாக நீண்ட காலத்துக்கு தனது இருப்பை தக்கவைத்து தனது பாரம்பரிய பிரதேசத்தில் நீடித்து நிலைத்து வாழமுடியும். இல்லையேல் காலக்கிரமத்தில் அச் சமுகம் அழிவடைவது நிச்சயம். இதற்கு உலகத்தில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. மேலும் இங்குள்ள அடுத்த சகோதர சிறுபான்மை இனத்தின் குறுகிய காலத்துக்குள் ஏற்பட்ட அதீத வளர்ச்சியே இதற்கு நிதர்சனமான சிறந்த உதாரணம் ஆகும்.
எனவே கடந்த 30 - 40 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் சமுகம் அபிவிருத்தியிலும் சரி, அரசியலிலும் சரி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுக்கொண்டு வருவதால் அதன் வருங்கால இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது. எனவே இதை போக்க நாம் தூரநோக்குச் சிந்தனையுடன் உடனடியாக செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது. நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகப் பாவிக்காமல் விட்டோமேயானால் நாம் எமது வருங்கால சந்ததிக்கு பாரிய துரோகம் இழைத்த பழியை ஏற்க வேண்டி வரும். எமது இன்றைய நிலை வாழ்வா? சாவா? என்பதுதான். எனவே எமக்கு கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டு “அணிலை ஏறவிட்ட நாய்” போல் தொடர்ந்தும் உரிமையும் இல்லாது, அபிவிருத்தியும் இல்லாது ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாறுவதா? அல்லது தீர்க்கமான முடிவை எடுத்து, எமது எதிர்காலச் சமுகத்தை அழிவுப்பாதையில் இருந்து பாதுகாக்க இந்தத் தேர்தலையாவது பயன் உள்ள வகையில் பயன்படுத்துவதா? முடிவு உங்கள் கையில்தான் தங்கியுள்ளது.
எனவே இதற்காக எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மண்பற்றும் தூரநோக்குச் சிந்தனையும் சுயநலமற்ற பொது நோக்கும் கொண்ட பலதுறை சார்ந்த நிபுணர்களுடனும், புத்திஜீவிகளுடனும், அனுபவசாலிகளுடனும், தொழில் முயற்சியாளர்களுடனும், முதலீட்டாளர்களுடனும், புலம்பெயர் தமிழ் உறவுகளுடனும் கலந்தாலோசித்து, நேர்த்தியான தூரநோக்குடைய சிந்தனைகளை உயரியசெயல்களில் கோர்த்து என்றும் எல்லோர்க்கும் உயர்வு கிடைக்கும், உண்மையிலும், நேர்மையிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக நின்று யாருக்கும் சோரம் போகாமல், எமது கனவுகளை நனவாக்க ஒன்று பட்டு ஈடுபட்டு நமக்கான இந்த கிழக்கு மண் மீள் எழுச்சி பெற உறுதி பூண்டு, அபிவிருத்தி மூலோபாயங்களை பயன்படுத்தி, திட்டங்களை வகுத்து, அவற்றை குறிகிய கால, நீண்ட கால அடிப்படையில் நிறைவேற்றும் நோக்குடன் எம்மால் தயாரிக்கப்பட்ட இந்த நம்பிக்கை கொள்கை பிரகடனத்தை உங்கள் முன் வைக்கின்றோம். அபிவிருத்தியா? அழிவா? சிந்தித்து திர்மானித்து உங்கள் வாக்குரிமைகளை பயனுள்ளவகையில் பயன்படுத்தி எமது சமுகத்தை அழிவுப் பாதையில் இருந்து மீட்க எம்முடன் கைகோருங்கள். இல்லையேல் எமது சமுகத்தை கடவுளால்கூடக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் ஒரு சமுகம் தங்களை காப்பாற்ற தாங்களாகவே முன் வராவிட்டால் ஆண்டவன் கூட அவர்களை காப்பாற்ற முன்வர மாட்டார் என்பது சான்றோர் வாக்கும் உலக நீதியுமாகும். எனவே எமது சமுகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தற்போது கடவுளால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.
அரசியல் கொள்கை
அரசியல் அதிகாரத்தின் தேவையும் ஏக்கமும் கொண்ட ஒரு இனத்தின் ஆளுமை மிக்க அரசியற்கட்சி என்ற வகையில், எம்மக்களின் நில, நிருவாக, வேலைவாய்ப்பு, மொழி, அதிகாரம், எம்மண்ணை நாமே ஆள்வதற்கான தனித்துவ உரிமை போன்றவற்றை விட்டுக் கொடுக்காத எம்அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நாம் மரித்து மண்ணாய் போனாலும் எம் கொள்கை விதையாகி விருட்சமாய் வளர்ந்து எம் இனத்தைக் காக்கும் என்பது திண்ணம். நீண்ட நெடுங்காலமாக எமது அடிப்படை உரிமைக்காக ஆயுதமேந்திய இனத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் காலமயமாக்கலின் ஏற்றத்தாழ்வுகளிற்கு ஏற்ப பெரும்பான்மை சகோதர இனங்களின் இணக்கப்பாட்டுடன் கூடிய அதிகாரத்தின் பங்காளியான எம் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் நாம் பயணிக்கும் போது எதற்காகவும் விட்டுக் கொடுப்புக்களையும் செய்ததுமில்லை, செய்யப்போவதுமில்லை.
இலங்கையின் தேசிய இனமான பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அதிகார பகிர்வின் அடிப்படையாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட 13வது அரசியல் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்ட நில, நிருவாக, பாதுகாப்பு, அபிவிருத்தி, ஆளுமை உள்ள மாகாண சபையினை இன்னும் வீரியமுள்ள இலங்கை தாய் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், எம் சுய அதிகாரத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுக்காத வகையிலுமான அதிகார பகிர்வினை நாம் வேண்டி நிற்கின்றோம்.
எம் மக்களின் நியாயபூர்வமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகார பரவலாக்கத்தினை இணக்கப்பாட்டு அரசியல் மூலமும், வலுவான எம்மக்களின் ஆதரவுடனேயே வென்றெடுக்க முடியும். இன்னொரு பேரிழப்பையும் அவலத்தையும் தாங்கும் சக்தி எம்மண்ணுக்கும், மக்களுக்கும் இல்லை. ஆதலால் இவைகளை வென்றெடுக்கின்ற எம்மக்களின் பொறுப்பு மிக்க அரசியல் பிரதிநிதிகள் எனும் உரிமையினை நாம் உரிமையுடன் வேண்டி நிற்கிறோம்.
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள்
நீண்ட நெடிய யுத்தத்தின் விளைவாக எம் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவுகளின் வேதனையும் அவர்களின் மன கிலேசத்தினையும் நாம் நன்கு அறிவோம். தேசிய பொறிமுறை ஒன்றினூடாக சட்டபூர்வமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
தென்னிலங்கையில் ஏற்பட்ட சிங்கள இளைஞர்களின் ஆயுத கிளர்ச்சியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கனக்கான பெரும்பான்மை இன இளைஞர் யுவதிகள் அரசாங்கத்தின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட வரலாறும் எம் மண்ணில் உண்டு. எனவே இம்முன்மாதிரிகளையும் அடிப்படையாகக் கொண்டு பேதமின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நாம் எம்மக்கள் எனும் அதிகாரத்தை தேசிய சர்வதேச மட்டத்தில் அழுத்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்துவோம்.
30 வருட யுத்தம் எம்மில் விட்டுச்சென்ற வடுக்களில் காணாமல் போன எம் உறவுகள் முதன்மையானவர்கள். காணாமல் போன நம் உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்ற ஏக்கத்துடன் அவர்களின் உறவுகள் ஒவ்வொரு நாளும் கண்ணீரில் கரைவதை நாம் நன்கறிவோம்.
காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறுதியான பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயமும் அதற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையும் கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதான அவர்களின் உறவுகளின் உள்ளங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். தடுப்பு முகாம்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.
எம் தாயகத்தில் அவசியமின்றி முடக்கப்பட்டுள்ள எம் மக்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் அரசியல் தேவையின் நிமிர்த்தம் கையேற்கப்பட்ட நிலங்களுக்கான உரிய ந~;ட ஈடுகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.
வடகிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பு, புராதன தொன்மை வாய்ந்த அடையாளங்களையும் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் எம்மூதாதையர்களின் புராதன அடையாளங்களை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது சிதைக்க நினைக்கும் எந்த ஏற்பாடுகளையும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பதுடன் அதற்கு எதிராக வெகுஜன போராட்டத்தில் ஈடுபடவும் தயங்கவும் மாட்டோம். ஒரு இனத்தின் இருப்பை காக்க புராதன தன்மையை நிருபிக்க இன்னொரு இனத்தின் பாரம்பரிய புராதனத்தின் தன்மையில் கைவைக்க முற்படுவதை கலாசார ஆக்கிரமிப்பாகவே நாம் காண்கின்றோம்.
எம்மண்ணில் எவ்வித கலாசார ஆக்கிரமிப்பிற்கும் நாம் இடமளிக்கப்போவதுமில்லை. சகல இனமக்களினதும் பிரதிநிதித்துவத்தினை கொண்ட புலமைசார் நிபுணர்கள் ஊடாக சுயாதீனமான முறையில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை நாம் வலியுறுத்தி உறுதிப்படுத்துவோம்.
விவசாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் விவசாய உற்பத்தி விளைவுத்திறன், பெறுமதி சேர் உற்பத்திகள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி விவசாயத்தொழிலை ஓர் இலாபகரமான தொழிலாக மாற்றி அமைப்பதற்கான திட்டங்களை வகுத்து அமுல் நடத்துவதே எமது விவசாயம் சம்பந்தமான கொள்கையாகும்.
- குறுகிய காலத்திட்டமாக தரமான விதைகள், நாற்றுகளை நேரகாலத்துக்கும், குறைந்த விலையிலும் விவசாயிகளுக்குப் பெற்று கொடுப்பதற்காக சகல விதமான ஊக்குவிப்புக்களையும், வசதிகளையும் வழங்கி, விதைகள், நாற்றுக்கள் உற்பத்தியாளர்களை உருவாக்கி, விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்து விதைகள், நாற்றுக்கள் உற்பத்தியை உள்ளுரில் அதிகரிக்கச் செய்வதுடன், விதை நெல் சுத்திகரிப்பு நிலையங்களையும் நிறுவுதல்.
- நீண்டகால திட்டமாக கரடியனாறு விவசாய ஆராய்ச்சி நிலையத்தை முழுமையாக இயங்கவைத்து அங்கு விதைகள், நாற்றுக்களை முழுஅளவில் உற்பத்தி செய்வதுடன், அங்கு கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தை முழுமையாக ஈடுபடுத்தி, எமது மாவட்ட மண்வளத்துக்கு ஏற்ப புதியவகை விதைகள், நாற்றுக்களைக் கண்டு பிடித்து உருவாக்கி விளைவித்து விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தல். அத்துடன் கரடியனாறு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தல்.
- விவசாயத் திணைக்களத்தையும், கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தையும் இணைத்து விவசாயம் தொடர்பான விசாய விரிவாக்க சேவைகள், ஆராய்ச்சிகள், நவீன தொழில்னுட்ப பிரயோகம், பசளை கிருமிநாசினிகள் பிரயோகம், மண்பரிசோதனைகள், நீர் உவர்த் தன்மைப் பரிசோதனைகள், நீர் முகாமைத்துவம், நிலத்தைப் பண்படுத்துதல், இயந்திர மயமாக்கல், நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் விவசாயத் தொழிpலை இலாபகரமாக செய்யக் கூடிய தந்திரோபாயங்கள், மற்றும் விவசாயம் தொடர்பான பெறுமதிசேர் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்தல் தொடர்பான களப்பரிசோதனைகளைச் செய்வதுடன் விவசாயிகளுக்கு அவைகள் சம்பந்தமான விழிப்புணர்வூட்டும் செயல் திட்டங்களையும், பயிற்சிகளையும் வழங்க ஏற்பாடு செய்தல்.
- விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்ட சகல அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டுச்செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நவீன விவசாய அபிவிருத்திக் கொள்கை ஒன்னறைத் தயாரித்து நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- விவசாய மக்கள் பொது கம்பனி ஒன்றை உருவாக்கி, அதில் மாவட்டத்திலுள்ள சகல விவசாயிகளையும் பங்காளிகளாக்கி பதிவு செய்து இலகு வங்கி கடன்கள், மானியங்களைப் பெற்று, களஞ்சிய சாலைகளை அமைத்தல், விவசாய பெறுமதிசேர் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் விவசாய உள்ளீடுகள் கொள்வனவு, விவசாய உற்பத்திப் பொருட்கள் விற்பனை போன்ற வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற நடவடிக்ககைளில் ஈடுபடவைத்து இடைத் தரகர்களிடமிருந்தும் முதலாளிகளிடமிருந்தும் விவசாயிகளை மீட்பதுடன், கடன் தொல்லையிலிருந்தும் விடுபடவைத்தல். அத்துடன் விவசாய,நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள அக்கம்பனிக்கு வசதி செய்து கொடுத்தல்.
- தேவையான இடங்களில் உவர்நீர்த் தடுப்பணை கட்டுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
- விவசாயத்துறை இயந்திர மயமாக்கப்பட்டதன் காரணமாகத் தங்கள் வாழ்வாதாரத் தொழிலை இழந்த வேளாண்மை வெட்டுபவர்கள், சூடடிப்பவர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் காணி அற்றவர்கள் ஆகியோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் தரிசாகக் கிடக்கும் அரச காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கி அவர்களுக்கு அக் காணிகளை பகிர்ந்தளித்து அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தல்.
- சித்தாண்டியில் இருந்து அழிவுக்குள்ளான பாரிய அரிசி ஆலையைப் போன்றதொரு அரிசி ஆலையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வயற்பிரதேசமான கூளாவடியில் மீள உருவாக்குவதுடன், ஆயித்தியமலை அரிசி ஆலையையும் விரிவுபடுத்தி அவற்றைப் புதிதாக உருவாக்கப்படும்h விவசாய மக்கள் பொதுக் கம்பனியிடம் ஒப்படைத்தல்.
- விவசாயக் கிராமங்களில் சிறியரக அரிசி ஆலைகள், மாவரைக்கும் ஆலைகளை நிறுவி அவற்றை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கையளித்தல்
- தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, இலகுகடன் அடிப்படையில் நடுத்தர அரிசி ஆலைகளையும் மாவரைக்கும் ஆலைகளையும் தேவையான இடங்களில் நிறுவி, பெறுமதிசேர் தானிய உணவு பதனிடல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வசதி செய்து கொடுப்பதுடன், அப்பிரதேசங்களில் உமி, தவிடு, குறுணல் என்பனவும் கிடைக்க வழி செய்தல்.
- பெண்கள் சுயதொழில் அமைப்புக்களை நிறுவி, சேமிப்புக் குழுக்களை அமைத்து பதிவு செய்து நிதி, உபகரணங்கள், பயிற்சிகளை வழங்கி விவசாயம் தொடர்பான பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களான அரிசி,தானிய மாவகைகள்,தின்பண்டங்கள், பதனிடப்பட்ட தானிய உணவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- வீட்டுத்தோட்ட முறையில் காளான் செய்கையில் பெண்களை ஈடுபடுத்தி வருமானம் ஈட்ட வழி செய்தல்.
- ஏனைய உணவுப் பயிர்கள், தானிய வகைகள், கிழங்கு வகைகள், கீரை வகைகள், மரக்கறிப் பயிர்கள், போன்ற பயிர்களை விவசாய நிலங்களில் மாற்றுப் பயிர்ச்செய்கையாகவும், தரிசு நிலங்களிலும் தோட்டங்களாகவும் செய்வதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதுடன், தேவையான பயிற்சிகள், விதைகள் மற்றும், நாற்றுக்களையும் வழங்க ஏற்பாடு செய்தல்.
- தும்பங்கேணி, விவசாய திட்டத்தை புனரமைத்து இயங்க வைப்பதுடன், அது போன்ற திட்டங்களை ஏனைய பிரதேங்களிலும் ஏற்படுத்தல்.
- மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மரக்கறிப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துவதுடன், அவற்றை இரசாயன கிருமிநாசினிகளற்ற முறையில் சுகாதாரமான உணவுகளாகப் பயிரிடுவதற்கான விழிப்புணர்வை ஊட்டுவதுடன் மேலும் கோவா, பீட்றூட் போன்ற பயிர்களையும் பயிரிட ஊக்கமளித்தல்.
- வெற்றிலை செய்கையை ஊக்கப்படுத்தி அபிவிருத்தி செய்தல்.
- கல்லோயா குடியேற்றத் திட்டக்கிராமங்களிலும் மரக்கறிப் பயிர்ச்செய்கைத் தோட்டங்களில் மக்களை ஈடுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- ஈரளக்குளம், கூளாவடி, நவகிரிநகர் ஆகிய இடங்களில் புதிய கமநல சேவை நிலையங்களை நிறுவுவதுடன், ஈரநெல்லைக் காயவைக்கும் கொங்கிறீற் தளங்களை கண்டங்கள் ரீதியாக ஏற்படுத்தி உரிய கமநல அமைப்புக்களிடம் அவற்றை பாராமரிக்கும் பொறுப்பைக் கையளித்தல்.
- தேவையான இடங்களில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான பொருளாதார வர்த்தக விற்பனை நிலையங்களை அமைத்தல்.
- வெள்ளம், வரட்சி போன்ற அனர்த்தங்களால் விவசாயத்துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் செயல் திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
- ஆகக் கூடிய விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு “விவசாய மன்னன்”; பட்டம் வழங்கி கௌரவிப்பதுடன், விவசாயக் கண்காட்சிகள், அறுவடை விழாக்கள், ஏர்பூட்டும் விழாக்கள்,புத்தரிசி விழாக்களை ஏற்பாடு செய்து நடாத்துதல்.
- இளைஞர்களை கூடுதலாக விவசாயத் துறையில் ஈடுபட வைப்பதற்கான செயற்றிட்டம் ஒன்றை தயாரித்து நடமுறைப்படுத்துவதுடன், காலப்போக்கில் இரசாயனப் பாவனையிலிருந்து சேதனப் பசளை பாவனை முறைக்கு விவசாயத்தை மாற்றவதற்கான செயல்திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
பழச்செய்கை
- வீடுகள்தோறும் பழமரக் கன்றுகள் வழங்குவதுடன், பழச்செய்கை கிராமங்களை உருவாகிப் பழச் செய்கையை விரிபுபடுத்தல். அத்துடன் வாகரையில் பழரசத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுதல்
- காட்டுப் பகுதிகளில் இருந்து பெறப்படும் பருவகால பழங்களான வீரப்பழம், பாலைப்பழம், விளாம்பழம், நுரைப்பழம், நாவற்பழம் போன்ற பழங்களைச் சேகரிக்கும் அப்பகுதியிலுள்ள மக்களை இடைத்தரகர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக கமநல அமைப்புகள் மூலம் அவைகளை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்து சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
நீர்ப்பாசனம்
- விவசாயிகள்எதிர்நோக்கும் பிரச்சினைகளில் நீர்ப்பாசனமும் முக்கியமானதொன்றாகும். இவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்கநிதி மற்றும் சர்வதேசநிதி வழங்கும் நிறுவனங்களின் உதவி மூலம் பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்.
- மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் அடங்கும் கல்லோயாதிட்டக் குடியேற்றக் கிராமங்களுக்கு கிரமமாக நீர் விநியோகத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டை அம்பாறை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளல்.
- கல்லோயாத் திட்டத்துற்குள் அடங்கும் அனைத்து வாய்க்கால்களையும் சீரமைத்து கொங்றீட் வாய்க்கால்களாக மாற்றி அமைத்தல்.
- கல்லோயாத் திட்டக் குடியேற்றக் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் ஒன்றை அமுல்படுத்தல்.
- முறையான சாத்திய வள அறிக்கைளை மேற்கொண்டு உன்னிச்சை குளத்து வலது கரையில் வான் ஒன்று அமைத்து கொய்யா திடல் ஊடாக அரைச்சகல் குளம், புளுகுனாவி ஊடாக கடுக்காமுனைக் குளத்துக்கு நீரைக் கொண்டு செல்வதன் மூலம் மேலதிகமாக 10000 ஏக்கர் காணியில் இரண்டு போகமும் நெற் செய்கையை பண்ணுவதுடன், குடிநீர்ப் பிரச்சினை, வெள்ள அழிவு என்பவற்றையும் தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
- உன்னிச்சை குளத்து நீரை கரவெட்டியில் மறித்து முட்டுக்குடாவரைக் கொண்டு செல்வதுடன், இடது கரை வாயக்காலை கற்பானைக்குளம் ஊடாக கொண்டு சென்று கரடியனாற்றிலுள்ள பெருமளவு காணிகளுக்கும் கரடியனாறு விதைநெல் பண்ணைக்கும் நீர்பாசனம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- உன்னிச்சை திட்டத்திலுள்ள முக்கிய வாய்கால்கள் அனைத்தையும் கொங்றீட் வாய்கால்களாக மாற்றியமைத்தல்.
- கித்துள், உறுகாமம் குளங்களை இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது திட்டத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுப்பதுடன், அதனுடன் தொடர்புடைய சகல கடடுமான பணிகளையும் மேற்கொள்ளல்.
- கிரான்புல் அணைக்கட்டையும் அதனுடன் தொடர்புடைய வாய்க்கால்கள், ரெகுலேட்டர்கள், பாலங்கள், பாதைகள், மதகுகள் ஏனைய தேவையான கட்டுமானப் பணிகள் மற்றும் சிறு நீர்பாசன குளங்கள், நீர்த்தேக்கங்கள் அமைத்து அவைகளுக்கு நீரை வழங்குவதன் மூலம் அதிகளவான மேலதிக காணிகளுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குவதுடன் மேலதிகமாக செய்கை பண்ணக் கூடிய அரச காணிகளை காணி அற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இதன் மூலம் சித்தாண்டி விவசாயிகளின் போக்குவரத்து பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் மண் கொள்ளைக்காரர்கள் இடமிருந்து நிலம் காப்பாற்றப்படும்.
- எல்லா நீர்ப்பாசனக் குளக்கட்டுகளையும் திருத்தி அமைத்து உயர்த்துவதுடன், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நீர் முகாமைத்துவத்தை பேணவும் குளப்படுக்கைகளை அத்துமீறி அபகரிப்பதை தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- மீயான்கல்குளம், அடைச்சகல்குளம், புளுகுனாவிக்குளம், கிருமிச்சைஓடைக்குளம் ஆகியவற்றை பூரணமாகப் புனரமைத்து தேவையான உட்கட்மைப்பு வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தல்.
- பழுகாமம், தும்பங்கேணி, துறைநீலாவணை, களுதாவளை, ஈரளக்குளம், வடமுனை மற்றும் தேவையான இடங்களில் ஏற்று நீர்ப்பாசன திட்டங்களை அமைத்தல்.
- தூர்ந்துபோன சிறு நீர்ப்பாசனக்குளங்களைப் புனமைப்பதுடன் எல்லா சிறு நீர்ப்பாசனக் குளங்களையும் ஆழமாக்குதலுடன் பூரணமாக புனரமைப்புச் செய்தல். புதிய சிறுகுளங்களையும் சிறுஅணைக்கட்டுகளையும் தேவையான இடங்களில் அமைத்தல். அத்துடன் நீர்ப்பாசனக்குளங்களை அத்துமீறி பிடித்தல், பயிர் செய்தல் என்பவற்றை தடுப்பதற்காக குளப்படுக்கையை அண்டிய பகுதிகளில் மரங்களை நட நடவடிக்கை எடுத்தல்.
- மகாவலி அபிவிருத்தி திட்ட “பி(டீ)” வலையத்துக்குள் அடங்கும் மாதுறு ஓயா திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியிலுள்ள மியான்கல்குளம் உட்பட பல நீர்ப்பாசன குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், பல புதிய குளங்களும், நீர்த்தேக்கங்களும், அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் அமைக்கப்பட்டு, பலநூற்றுக்கணக்கான மேலதிக காணிகளுக்கு நீர்ப்பாசன வசதி வழங்கப்படுவதுடன் புதிய குடியேற்றத் திட்டங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போது இந்தக் குறிப்பிட்ட பிரதேசங்களில் தமிழ் மக்களே மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அனுமதிப் பத்திரம் பெற்று குடியிருந்து பயிர் செய்து வருகின்றனர். ஆனால் இதேபோல்தான் மகாவலி அபிவிருத்தி திட்ட “பி” வலையத்துக்குள் அடங்கியிருந்த நாவலடியிலிருந்து புணானை வரையிலான காணிகளிலும் குடியிருந்தகோயில்களும், கிறிஸ்த்தவதேவாலயங்களும் அமைத்து தமிழ் மக்களே குடியிருந்து பயிர் செய்து கொண்டிருந்தனர். ஆனால் நடந்தது என்ன? அங்கிருந்த தமிழ்மக்கள் அனைவரையும் அடுத்த சிறுபான்மை இன அரசியல் பலமிக்க அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்கை பாவித்து அமைச்சரவை அனுமதி பெற்று அந்த தமிழ் மக்களுக்கு அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்துவிட்டு, அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் குடியிருந்து பயிர் செய்த காணிகளில் மகாவலி அபிவிருத்தி சபையிலிருந்து புதிய காணி அனுமதிப் பத்திரங்களை பெற்று தங்கள் சிறுபான்மை இன மக்களை குடியேற்றி நகரமயமாக்கியதுடன், சட்டத்துக்கு விரோதமாக வேறொரு பிரிவுக்குரிய பிரதேச செயலக கட்டிடத்தை நிறுவியதுடன், அரபுக் கல்லூரிகள், இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பெரியளவு காணிகள், தொழிற்சாலைகளை அமைப்பதற்கான காணிகளை வழங்கியுள்ளனர். ஆனால் புதிதாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குடியேற்றங்கள் ஏற்படுத்தும்போது அங்கு ஏற்கனவே அரசாங்க அதிபரின் அனுமதிப் பத்திரம் பெற்று குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறை அரசியல் செல்வாக்கினால் புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதை எந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி பேசவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
- மேலும் புதிதாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மகாவலி கங்கை கடலில் கலக்கும் முன் கதிரவெளி கல்லரிப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டு மகாவலி கங்கை நீரை திருப்பி வாகரைப் பிரதேசத்தில் உள்ள அதிகளவு நடுத்தர, சிறிய குளங்களுக்கு நீர் வழங்குவதுடன், புதிய சிறு குளங்களையும், சிறிய அணைக்கட்டுகளையும், நீர்த்தேக்கங்களையும், வாய்க்கால்களையும் நிறுவிப் வாகரைப் பிரதேசத்தில் அதிகளவு ஏக்கர் காணிகளுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குவதுடன் குடியேற்ற திட்டங்களும் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- எனவே மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள மேற்படி கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மியான்கல், குடும்பிமலை, வடமுனை, ஊத்துச்சேனை, கக்கிளாச்சோலை, கூளாவடி பகுதிகளிலும் மேலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல பிரதேசங்களிலும் காணப்படும் அதிகளவான காணிகளையும் நாவலடி, புனானை காணிகளை தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து தங்கள் இனத்தை குடியேற்றியது போல, மேற்படி குறிப்பிட்ட பிரதேச காணிகளிலும் தங்கள் இனத்தை திட்டமிட்ட முறையில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குடியேற்றி, ஏற்கனவே தூரநோக்கு சிந்தனையுடன் ஓட்டமாவடி பிரதேசத்தை சிறிய மக்கள் தொகையுடன் சிறிய நிலப் பரப்புடன் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் இணைத்து அவற்றை விஸ்தரிக்க திரைமறைவில் அடுத்து சிறுபான்மையின அரசியல் சக்திகள் எல்லாம் ஒன்றுபட்டு கட்சி பேதம் பாராமல் இனத்தையும் மதத்தையும் மட்டும் முன்னிறுத்தி ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சியில் அமரப்போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கடைசிவரை முடியாது. ஏனெனில் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோதுதான் நாவலடி, புனானை பறிபோனது. எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் மட்டக்களப்பில் இருந்து செல்லும் ஒரு தமிழ் முழுமையான அமைச்சரவை அந்தஸ்துள்ள துடிப்பும், துணிவும், சக்தியும், திறமையும், தகுதியும் உள்ள ஒருவராலேயே முடியும். அந்த தகுதி அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ,கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திரு பஸில் ராஜபக்ஷ ஆகியோருடன் நட்பு ரீதியாகவும், புரிந்துணர்வுடனும் பழகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.பிள்ளையான் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.
கால்நடை வளர்ப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைவளர்ப்பு ஒரு முக்கியமான வாழ்வாதார தொழிலாக நடைபெற்று வருகின்றது. கிராமப்புற மக்களில் அதிகளவானோர் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் இது ஒரு அபிவிருத்தி அடைந்த தொழிலாக மாறவில்லை. இதை அபிவிருத்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- தற்போதைய மேய்ச்சல் தரைகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், புதிய மேய்ச்சல் தரைகளையும் ஏற்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தி அவற்றில் நல்லினப் புல்களையும் உண்டாக்க நடவடிக்கை எடுத்தல். அத்துடன் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் தரைகளில் எமது மாவட்ட கால் நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சட்ட நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைக்க ஏற்ற எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல்.
- கால்நடை வளர்ப்போர் சங்கங்களை வலுப்படுத்தி அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஊட்டி நல்லினக கால்நடைகளையும் வழங்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- நீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் கோடைகாலங்களில் கால்நடைகள் மரணிப்பதை தடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், ஆழ் கிணறுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் குழாய்க்கிணறுகளை ஏற்படுத்தி வக்குகள் மூலம் நீரைச் சேகரித்து கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல்.
- பாரம்பரிய முறையிலான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதன் ஊடாக பயிர்ச் செய்கையாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு இடையிலான பிணக்கைத் தீர்த்துவைக்க முயலுதல்.
- நல்ல உயர்ந்த இன எருமை மாடுகளை கால்நடை வளர்ப்பவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் எருமை மாட்டு பண்ணைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- தேவையான இடங்களில் பால் சேகரிப்பு நிலையங்களையும், குளிரூட்டும் நிலையங்களையும் நிறுவ நடவடிக்கை எடுத்தல்.
- உயர்ந்த இன ஆடுகளை கொண்ட ஆட்டுப் பண்ணைகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பதுடன், உயர்ந்த இன காளை ஆடுகள் மூலம் ஆடுகளைச் சினைப்படுத்தும் நிலையங்களையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- கால்நடை வளர்ப்பில் மட்டக்களப்பு ஓரளவு முன்னணியில் இருந்தாலும், தேசிய ரீதியில் பால் உற்பத்தியில் தாழ் நிலையிலேயே காணப்படுகிறது. எனவே இதைப் போக்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து தேசிய ரீதியில் பால் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களிப்பைச் செய்யக்கூடியதாக மாவட்டத்தை மாற்றியமைப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்டத்திற்குள்ளேயே அவற்றைப் பெறுமதிசேர் பதனிடப்பட்ட பலதரப்பட்ட பால் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலோபாய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்காக சாத்தியமான கொள்கைத் திட்டமொன்றை துறைசார்நிபுணர்கள், பல்தேசியக்கம்பனிகள், முதலீட்டாளர்கள், நிதிநிறுவனங்கள் ஆகியவர்களைக் கொண்டு தயாரித்த செயல்திட்டமொன்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- பெறுமதிசேர் பதனிடப்பட்ட பால்பொருட்களான பசும்பால், யோகட், தயிர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர், பால்கோவா, பட்டர் என்பவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், எமது மக்களை புட்டிப்பால் அருந்தும் கலாசாரத்தில் இருந்து பசும் பால் அருந்தும் பழக்கத்துக்கு மாற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட விழிப்புணர்வூட்டும் செயல் திட்டத்தை தயாரித்து நடைமுறைப் படுத்தல்.
- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தை வலுப்படுத்தி போதுமான கால்நடை வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களையும் நியமித்து கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தையும் இணைத்து விரிவாக்க சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப ரீதியான ஆராய்ச்;சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், மாவட்ட கால் நடை வைத்தியசாலை மற்;றும் பிராந்திய கால்நடை வைத்தியசாலைகளையும், கால்நடை மருந்தகங்களையும் நிறுவுவதுடன், அம்புலன்ஸ் ஒன்றை வழங்கி நடமாடும் கால்நடை வைத்திய முகாம்களையும் ஒழுங்கு செய்து நடத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
- முதலீட்டாளர்களை ஊக்குவித்து இலகு கடன்கள் வழங்குவதன் மூலம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் நல்லினக் கோழிகளைக் கொண்ட கோழிப்பண்ணைகளை சுற்றாடலை பாதிக்காத வகையில் உருவாக்குவதுடன் உள்;ர் கோழி இறைச்சியையும் முட்டைகளையும் கொள்வனவு செய்து உண்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் வெளியிலிருந்து வரும் பொதியிடப்பட்ட அவ்வகை உணவுப் பொருட்களால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பயங்கரமான தொற்றா நோய்த் தாக்கங்கள் சம்மந்தமாகவும் மக்களிடையே விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
- பலவகைச் சத்துக்கள் உள்ள காடை கோழிமுட்டைகளைச் சேகரித்து பொரிக்க வைத்து காடைக்கோழிக்குஞ்சுகளை பொதுமக்களுக்கு வழங்குவதுடன், காடைக்கோழி பண்ணைகளையும் உருவாக்க நடவடிக்கை எடுத்தல்.
- கோழிகள், கால்நடைகளின் உணவுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்ககை எடுப்பதுடன், நவீன முறையில் கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் நிலையத்தை நிறுவி கோழிக் குஞ்சுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.
- பன்றி வளர்ப்பை ஊக்கப்படுத்தி பன்றி வளர்ப்பு பண்ணைகளை உருவாக்க நடவடிக்கi எடுத்தல்.
- மாடுகள் விற்பனை செய்வதில் உள்ள குளறுபடிகளை சீர் செய்யும் பொருட்டு மாடுகள் விற்பனை செய்தல், கொண்டு செல்லல், இறைச்சிக்காக அறுத்தல், அவற்றுக்கான அனுமதி வழங்கல் தொடர்பான சட்டங்களை கண்டிப்பாக அமுல் நடத்த நடவடிக்ககை எடுப்பதுடன,; குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் வாராந்த மாடு விற்பனை சந்தைகளை ஏற்படுத்தி அவ்விடங்களில் மட்டும் கிராமசேவை உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கால் நடை வைத்தியர் மேற்பார்வையில் மட்டும் மாடுகளை விற்பனை செய்யும் நடைமுறையைக் கண்டிப்பாக அமுல் படுத்துதல். மிருகங்கள் இறைச்சிக்காக அறுக்கப்படும் நிலையங்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் நேரடி மேற்பார்வையில் இடம்பெறுவதை உறுதி செய்தல்.
மீன்பிடி
மட்டக்களப்பு மாவட்டம் நீளமான கடற்கரைகளையும், அதிகளவான வாவிகளையும், இயற்கையான நீர் நிலைகளையும் கொண்டிருந்தும் பிடிக்கப்படும் மீனின் அளவு தேசிய ரீதியில் 8.75 மடடுமேயாகும். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இத்துறையில் ஈடுபடும் தழிழர்களும், முதலிடும் தமிழர்களும் விஷேடமாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழர்களும், பெறுமதி சேர் மீன் உற்பத்திப் பொருட்களில் ஈடுபடும் தமிழர்களும்; 15 வீதத்துக்கும் குறைவாக காணப்படுவதாகும். எனவே இவற்றை போக்க பல விதமான முயற்சிகள் எடுக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் முயற்சியாண்மையாளர்களையும், முதலீட்டாளர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் ஊக்குவித்து இலகு கடன் திட்;டம், மானிய திட்டங்கள் மூலம் ழுழுமையாக நவீpன உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிக்குரிய ஒருநாள், பலநாள் படகுகளைக் கொள்வனவு செய்யவும் அதில் ஈடுபடுபவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதுடன், இதில் கூடுதலாக இளைஞர்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
- வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை பேத்தாழைவரை விரிவுபடுத்தி பேத்தாழைவரைக் கடலை ஆழமாக்கி, இறங்கு துறையை பேத்தாழை வரை விஸ்தரித்து பேத்தாழைப் பகுதியிலும் மீன்படித் துறைமுகத்துக்குரிய எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி துறைமுக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தல்.
- முறையான சாத்தியவள அறிக்கைகளை மேற்கொண்டு மட்டக்களப்பு முகத்துவாரத்தில் பொருத்தமான இடத்தில் மற்றும் களுவேங்கேணி, பால்சேனை ஆகிய இடங்களிலும் எல்லா வசதிகளும் கொண்ட மீன் பிடித் துறைமுகங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- தற்போதுள்ள ஐஸ் தொழிற்சாலையை புனரமைப்பதுடன் கல்குடா, கதிரவெளி பகுதிகளிலும் ஐஸ் தொழிற்சாலைகளை அமைத்தல்.
- பட்டிருப்புத் தொகுதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் உள்;ர் மீனவர்களுக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதுடன், பாடுகள் வழங்கும் போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஒருநாள் படகுகளை வழங்குவதுடன், பயிற்சிகளையும் வழங்கி அவர்களை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதி கடல்பரப்பில் மீன்வளம் அதிகம் காணப்படுவதால் இது சம்பந்தமாக விஷேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு இப்பகுதியில் ஆழ்கடல் மீன்படியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- ஆழ்கடல் மீன்பிடிப்பாளர்கள் சங்கங்களை வலுப்படுத்தி, மேலும் சங்கங்களை உருவாக்குவதுடன், அவர்களுக்கு நவீனதொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சிகளையும், தங்குமிட வசதிகளையும், தேவையான வளங்களையும் வழங்குவதுடன், அவர்களுக்கு நவீன தொழி நுட்பங்களைப் பாவித்து பெறுமதிசேர் மீன் உற்பத்திப்பொருட்களை உறப்த்தி செய்வதற்கான பயிற்சிகளையும் உபகரணங்களையும் இலகு கடன் வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதில் மீனவக் குடும்பப் பெண்களைக் கூடுதலாக ஈடுபடுத்தவும், இவைகளுக்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- படகுகள், வலைகளைத் தயாரித்தல் மற்றும் திருத்தியமைத்தல் தொடர்பான தொழில் கூடங்களை ஏற்படுத்துவதுடன், அதில் ஈடுபடுபவர்களுக்கான நிதி வசதிகள், உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கவும் ஏற்பாடு செய்தல்.
- வாவிகள், நீர் நிலைகள், குளங்களில் நன்னீர் மீன்பிடித் தொலில் ஈடுபடும் மீனவர் சங்கங்களை வலுப்படுத்துவதுடன், அவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள், வலைகள், மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்குவதுடன், இறங்கு துறைகள், மீனவர் தங்குமிடங்கள், ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அத்துடன் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை இலகுகடன் அடிப்படையில் வழங்கவும் ஏற்பாடு செய்தல்.
- மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய அரச, அரசசார்பற்ற நிறுவனங்களை வலுப்படுத்தி விரிவாக்க சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவர்களின் நலன்புரி மற்றும் காப்புறுதி செயல்பாடுகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- நீர்ப்பாசனக் குளங்களிலும், பருவகால நீர்நிலைகளிலும், இயற்கையான நீர்த் தேக்கங்களிலும் மீன் குஞ்சுகளை இட்டு வளர்ப்பதுடன், இதற்கான பயிற்சிகள், பாதுகாப்புக்களை வழங்குதல். அத்துடன் பொருத்தமான இடத்தில் மீன் குஞ்சுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றையும் ஏற்படுத்திப் பராமரிக்க நடவடிக்கை எடுத்தல்.
- கண்டல்தாவரங்களை அழிப்பதாலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும், திண்மக்கழிவுகளை இடுவதாலும் இரசாயனம் கலந்த கழிவு நீர்களை விடுவதாலும் வாவிகளிலும், நீர் நிலைகளிலும் மீன் இனங்கள் அழிந்து கொண்டு போவது சம்பந்தமான வழிப்புணர்வை மக்களிடையே ஊட்டுவதுடன், இவைகளைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்ககைகளை கடுமையாக அமுல்படுத்தவும் உரிய இடங்களில் கண்டல் தாவரங்களை நடவும் நடவடிக்கை எடுத்தல்.
- சுற்றாடலுக்கு மாசு ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையிலான இறால் மற்றும் நண்டு வளர்க்கும் பண்ணைகளை பொருத்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இது சம்பந்தமாகச் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல்.
- மீன்பிடித்துறைசார்ந்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஈடுபடுத்தவும், மீன்பிடித்துறை சம்பந்தமான கற்கை நெறியை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தவும் முயற்சிகளை எடுத்தல்.
பல்லாண்டுப் பயிர்ச்செய்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாண்டுப் பயிர்களாக தென்னை, பனை, மரமுந்திரிகை என்பன பெருந்தோட்டங்களாகவும், வீட்டுத்தோட்டங்களிலும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
தென்னைச்செய்கை
மட்டக்களப்பிலிருந்து முன்பு தேங்காய், கொப்பரா என்பன ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. ஆனால் தற்போது தென்னம் பொருட்கள் அனைத்திற்கும் வெளிமாவட்டங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. சூறாவளிக்கு முன் 40000 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்ட தென்னை தற்போது 15000 ஏக்கரில் மட்டுமே செய்கைபண்ணப்படுகிறது. எனவே தென்னைசெய்கையை விஸ்தரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- தென்னை உற்பத்திச் சபைக்கு தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களை நியமித்து வலுப்படுத்தி விரிவாக்க சேவைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ஈடுபடுத்தி தென்னைப் பயிர்ச்செய்கை, தொடர்பான நல்லின நாற்றுக்கள், நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டு தெளிவூட்ட நடவடிக்கைகள் எடுத்தல்.
- பழைய தென்னந் தோட்டங்களை மீள்நடுகை செய்து புனரமைப்பதுடன், புதிய தென்னந்தோட்டங்களை உருவாக்கவும் தென்னந்தோட்டங்களில் ஊடுபயிர்களை வளர்க்கவும், மானியங்களையும், இலகுகடன் வசதிகளையும் ஏற்பாடு செய்தல்.
- தென்னைப்பயிர்ச் செய்கையாளர் சங்கங்களை வலுப்படுத்தி, தேவையான புதிய தொழில்நுட்பம் மற்றும் நோயத்;தடுப்பு சம்பந்தமான பயிற்சிகளையும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் நல்லின தென்னம் நாற்றுகளையும் பசளை வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- தமிழ் தொழில் முயற்சியாண்மையாளர்களையும், முதலீட்டாளர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் ஊக்குவித்து மானியங்கள், இலகுகடன் திட்டங்கள் மூலம் நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து தென்னம் பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களான தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால், கொப்பரா, தென்னம் கிடுகு, தென்னம்பாணி போன்ற பொருட்கள், கால்தட்டி, சிறட்டைப் பொருட்கள், புண்ணாக்கு, கள்ளு, வினாகிரி, பிஸ்கட், தேங்காய்துருவல், சிரட்டை, சிரட்டைக்கரி, அலங்காரப்பொருட்கள், அகப்பை, தூரிகைகள், தும்புத்தடி, ஈர்க்குத்தடி, தளபாடங்கள், சிறுகைக்கூடைகள், தென்னம் சர்க்கரை, பாய், பெட்டி, கயிறு மற்றும் தும்பும், தும்பு சார் உற்பத்திப் பொருட்களும் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் குடிசைக் கைத்தொழில் நடுத்தர, பாரிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
மரமுந்திரிகை செய்கை
சந்தைப் பொறுமானம் கூடிய மரமுந்திரிகைப் பயிரைச் செய்வதற்கு மட்டக்களப்பில் 48500 ஏக்கர் நிலம் உகந்ததாக காணப்பட்டாலும் தற்போது 9000 ஏக்கரில் மட்டுமே செய்கைபண்ணப்படுகின்றது. அதிலும் நீண்டகால யுத்தம் காரணமாகவும், கண்காணிப்பு பராமரிப்பு இல்லாததாலும், உரிமையாளர்கள் அக்கறை காட்டாததினாலும் அதிகமான தோட்டங்கள் அழிவடைந்துள்ளதுடன் சில அழிந்துகொண்டும் இருக்கின்றன. எனவே மரமுந்திரிகை செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்நாடு, மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் மரமுந்திரிகைத் தோட்ட உரிமையாளர்களின் விபரங்களைத் திரட்டி அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி அவர்களில் பராமரிக்க விரும்புவோர்க்கு ஊக்குவிப்புக்களை வழங்குவதுடன், முடியாதவர்களுடைய திட்டங்களை அறிந்து அதற்கேற்ப மாற்று நடவடிக்கைகளை எடுத்து தோட்டங்களை மீள்நடுகை செய்து புனரமைக்க நடவடிக்கை எடுத்தல். வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 60ஆண்டுகளுக்கு முன் மரமுந்திரிகை செய்கைக்காக மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் வருடாந்தம் புதுப்பிக்கத்தக்க அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தற்போது பல்வேறுபட்ட செல்வாக்கினாலும், அரச ஊழியர்களின் ஊழல் மோசடி நடவடிக்கைகளினாலும் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளது. எனவே முறையான சட்டநடவடிக்கைகள் மூலம் அக்காணிகளை அரசாங்கம் மீளப்பெற்று மரமுந்திரிகை செய்கையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவற்றை நிபந்தனைகளின் அடிப்படையில் மீளப் பகிர்ந்;தளித்து மரமுந்திரிகைச் செய்கையை அப்பகுதியில் அபிவிருத்தி செய்யவும், மரமுந்திரிகை செய்கைக்கு பொருத்தமான ஏனைய இடங்களிலும் மரமுந்திரிகை செய்கையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தல். மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவராக அல்லது பணியாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு தழிழர் ஒருவரை நியமிக்கவும், மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை நியமித்து வலுப்படுத்தி தேவையான வளங்களை வழங்கி விரிவாக்க சேவைகளை விரிவு படுத்துவதுடன், கிரானில் அமைந்துள்ள மரமுந்திரிகை பண்ணையை நவீன தொழிநுட்பங்களைக் கொண்ட ஒரு மாதிரி மரமுந்திரிகைப் பண்ணையாக உருவாக்கி அங்கு நவீன முறையிலான பயிற்சி நிலையம் ஒன்றையும் நிறுவி, அதில் கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ஈடுபடுத்தி, மரமுந்திரிகை சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதியரக நாற்றுக்களை உருவாக்குவதுடன், மரமுந்திரிகை செய்கையாளர்களுக்கு தேவையான நவீன தொழிநுட்பம் மற்றும் பெறுமதிசேர் மரமுந்திரிகை பதனிடப்பட்ட பொருட்களை தயாரித்தல், தர நிர்ணயம் செய்தல், சந்தைப்படுத்தல் சம்பந்தமான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல். மரமுந்திரிகை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மரமுந்திரிகை செய்கையாளர் சங்கங்களை உருவாக்கி, பதிவுசெய்து, அவர்களுக்கு மரமுந்திரிகை நாற்றுக்களை வழங்கி, தோட்டங்களை மீள்நடுகை செய்து புனரமைக்கவும், புதிய தோட்டங்களை உருவாக்கவும் மற்றும் நவீன தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல். மரமுந்திரிகை செய்கை அதிகளவில் தமிழ் பிரதேங்களில் இடம்பெற்றாலும் அது சம்பந்தமான பெறுமதிசேர் கைத்தொழில்கள் வேறு பிரதேசங்களில் நடப்பதால் அதன் பிரதிபலன் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதைப் போக்குவதற்கு உள்ளுர் மற்றும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவித்து மானியங்கள், இலகுகடன் திட்டங்கள் மூலம் நிதியைப் பெற்று மரமுந்திரிகை தோட்டங்களை உருவாக்குவதுடன், பெறுமதிசேர் மரமுந்திரிகை பதனிடல் உற்பத்திகளான பதனிடப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்கள், பழரசம்,பழப்பாணி, ஜாம், வினாகிரி, வைன், பழவற்றல் மற்றும் ஏனைய பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் அதற்குத் தேவiயான நவீன தொழினுட்ப ரீதியான ஆலோசனைகளை தேர்ச்சிபெற்ற துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்கும், அவற்றுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல். மரமுந்திரிகை பதனிடப்பட்ட பருப்புக்களை நவீன முறையில் பதப்படுத்தி விற்பனை செய்வதற்கான நவீன உபகரணங்களையும் பயிற்சிகளையும் நிதி வசதிகளையும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வழங்கி குடிசைக் கைத்தொழில் ரீதியாக இத் தொழிலைச் செய்வதற்கு வசதி செய்து கொடுத்தல்.
பனைப்பயிர்
கற்பகதரு எனப்போற்றப்படும் பனைப்பயிர் தற்போது மட்டக்களப்பில் அருகி வருகிறது. அதிலுள்ள எல்லாப்பொருட்களும் பல வழிகளிலும் பயன்படுத்தக் கூடியதாக இருப்பதால் இதை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- பனை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபையில் மட்டக்களப்புத் தமிழர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மட்டக்களப்பு பிரதேச அலுவலகத்தில் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களை நியமித்து தேவையான வளங்களையும் வழங்கி விரிவாக்க சேவைகளை விரிவுபடுத்துவதுடன் நவீன தொழினுட்பத்தையும் பாவித்து பெறுமதிசேர் பனை உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பயிpற்சி நிலையம் ஒன்றை ஏற்படுத்தல்.
- பனை ஓலையால் செய்யப்படும் சுற்றுலா பயணிகளையும் ஏனையோரையும் கவரும் அழகிய வேலைப்பாடுகளுடைய பல்வேறுபட்ட கவர்ச்சிகரமான பொருட்கள்,சோடனைப் பொருட்கள், பைகள், பாய்கள், பெட்டிகள் போன்றவற்றையும் மற்றும் பெறுமதிசேர் பதனிடப்பட்ட பனங்கள், பனம்பாணி, பனங்கற்கன்டு, பனாட்டு, பனங்கிழங்கு, ஒடியல், வைன், பதநீர் வினாகிரி, பனம்களி, பனம்ஜாம், பலகாரவகைகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்யக்கூடிய நடுத்தரதொழிற்சாலைகளை அமைப்பதற்கும், குடிசைக் கைத்தொழில் ரீதியில் இத்தொழிலை செய்பவர்களுக்கு நவீன தொழிநுட்ப பயிற்சிகள், உபகரணங்கள் வழங்கி இத்தொழிலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
- மாவட்டம் முழுவதும் பனை விதைகளை வழங்கி பயிரிடமுடியாத உவர்த்தன்மையுள்ள இடங்களிலும் , தரிசுநிலங்களிலும், மண்ணரிப்பு ஏற்படும் இடங்களிலும், குளக்கட்டு ஓரங்களிலும், பெரிய சோதையன் கட்டுக்களிலும், மற்றும் வீட்டு வளவுகளிலும் பயிரிடுவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல்.
காட்டுவளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காடுகளின் அளவு குறைந்து கொண்டு வருகின்றது. சட்டவிரோத மரம் வெட்டுதல், சேனைப் பயிர்;ச்செய்கை, விறகுத் தேவை, குடியேற்றங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் வன விலங்குகள் மனிதக் குடியிருப்புக்குள் நுழைதல், மழைவீழ்ச்சி குறைவடைதல், வரட்சி, மண்ணரிப்பு, வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் கண்டல் காடுகள் அழிக்கப்படுவதால் மீன்வளம் குறைவடைவதுடன், கரையோர காடுகள் அழிக்கப்படுவதால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், கடலரிப்பு, மண்ணரிப்பு, சுனாமி போன்ற அனர்த்தங்களிலும் இருந்து பாதுகாக்கும் இயற்கைஅரண் இல்லாமல் செய்யப்படுகின்றது. எனவே இவற்றைப் போக்கி காட்டுவளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- வனபரிபாலன திணைக்களத்துக்கு தேர்ச்சி பெற்ற போதிய ஆளணிகளையும், வளங்களையும் வழங்கி, பிராந்திய அலுவலகங்களை விரிவுபடுத்தி வன பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், வன பரிபாலனம் தொடர்பான சட்டங்களை அமுல் நடத்தும்; சகல அரச நிறுவனங்களினதும் செயற்பாடுகளை திறனான முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- குறிப்பிட்ட சில வனங்கள், கண்டல் காடுகள், குளப்படுக்கை காடுகள் அமைந்துள்ள பிரதேசங்களை வனவிலங்குகள், பறவைகள் சரணாலயங்கலாகச் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதுடன், அங்கு புதிய காடுகளையும், நீpர் நிலைகளையும் உருவாக்குதல்.
- கரையோரப் பிரதேசங்களில் சமூகங்களின் ஒத்துழைப்புடன் சமூகக்காடுகளை உருவாக்குதல். அத்துடன் “மியாவாக்கி” என்னும் ஜப்பானிய முறையில் பாடசாலை மாணவர்களையும், சமூகங்களையும் ஈடுபடுத்தி தரிசு நிலங்கள், உவர் நிலங்கள் தோறும் உரிய காடுளை வளர்த்தல்.
- வீதியோரங்களில் ஏற்ற மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் பொறுப்பபை அவ் வீதியில் வசிப்போரிடம் அல்லது உரிய உள்;ராட்சி நிறுவனங்களிடம் ஒப்படைத்தல்.
- புதிய முறையில் வடிவமைக்கப்பட்ட நீண்ட நேரம் எரியக்கூடிய மரத்தூசி, உமி போன்ற எரி பொருட்களைப் பாவித்து இயக்கக்கூடிய அடுப்புக்களை உருவாக்கிக் கிராமப்புற மக்களுக்கு வழங்குவதுடன், ஏனைய மக்களிடையே எரிவாயு பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- தங்கள் வாழ்வாதாரத் தொழிலாக விறகு வெட்டி விற்கும் தொழிலைச் செய்யும் கிராமப்புற மக்களுக்கு அவர்களது பிரதேசங்களிலேயே அவர்களுக்குப் போதிய வருமானம் தரக்கூடிய பொருத்தமான வாழ்வாதார தொழிலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
- இயற்கையால் மனித சமுதாயத்தின் நன்மைக்காக அளிக்கப்பட்ட பெறுமதி மிக்க வளங்கள், கண்டல் காடுகள், கரையோரக் காடுகள், வனவிலங்குகள், பறவைகள், நீர்நிலைகள் என்பன மனித சமுதாயத்திற்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் அளப்பெரிய சேவைகளின் முக்கியத்துவத்தையும், அவைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய நமது தார்மீக பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியும் மனிதன் இயற்கையை அழித்தால் இயற்கையால் மனிதன் அழிவான் என்பதை பற்றியும் உணரவைப்பதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்து மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளை எடுத்தல்.
கைத்தொழில் துறை
கடந்த 30 வருட நீண்டகால யுத்த சூழ்நிலை காரணமாக உள்;ர் தமிழ் முதலீட்டாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் கைத்தொழில் துறையில் அச்ச நிலை காரணமாகவும் , இடர்களுக்கு அஞ்சியும் முதலிட விரும்பாமல் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறினாலும் கூட அவர்களது மனநிலையை மாற்றி அவர்களுக்கு உற்சாகமும், உறுதியும் ஊட்டி, அரசியல் அனுசரணை மற்றும் அரசியல் பாதுகாப்பை வழங்கக் கூடிய அரசியல் தலைமைகள் கிழக்கில் தோன்றாததன் காரணமாக வடக்கைப்போல் கிழக்கில் முதலிட விரும்பாமல் இருக்கிறார்கள். எனவே அந்த நிலையைப் போக்கி அவர்களை கிழக்கிலும் முதலிட வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
- அந்த வகையில் மாவட்டத்தில் காணப்படும் கடல், வாவிகள், களிமண், பன்புல், காடுகள் போன்ற இயற்கை வளங்களையும் மற்றும் விவசாயம், கால்நடை, மீன்பிடி மற்றும் தென்னை, மரமுந்திரிகை போன்றவற்றில் இருந்து செய்யப்படும் பெறுமதிசேர் உற்பத்திகளையும் கைத்தறி நெசவு, தோல் பொருட்கள், தளபாடத் தயாரிப்புக்கள், மட்பாண்டங்கள்உற்பத்தி, செங்கல் உற்பத்தி, பன் பொருட்கள் உருவாக்கல் மற்றும் கருங்கல் உடைத்தல், தேன் உற்பத்தி போன்றன தொடர்பான கைத்தொழில் துறைகளில் உள்;ர், வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலிட ஊக்குவித்து சிறிய, நடுத்தர, பாரிய கைத் தொழில், பேட்டைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- இதற்காக முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரச அங்கீகாரம், அரச உதவிகள், அரச கொள்கைகள், மானியங்கள், இலகுகடன் வசதிகள், நவீனதொழிநுட்பம், வளமதிப்பீடு, தரநிர்ணயம், சந்தை ஆய்வுகள், புதிய வியாபார தந்திரோபாயங்கள், நவீன உபகரணங்கள் பிரயோகம், நிதிப் பயன்பாடு, சட்ட ஆலோசனைகள், வரி நடைமுறைகள், பதிவு செய்தல் நடைமுறைகள், சுற்றாடல் நடைமுறைகள், அனுமதிகள்பெறும் நடைமுறைகள், இவைகள் சம்பந்தமான நாட்டில் உள்ள ஏனைய தொழில் முயற்;சியாளர்கள், முதலீட்டாளர்களுடனான தொடர்புகளைப் பேணல், விற்பனைப் பொறிமுறைகள், நவீன விளம்பர யுத்திகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விஷேட துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகளையும், பிரபல தொழில் முயற்சியாளர்களைக் கொண்டு அறிவியல் மற்றும் அனுபவ ரீதியான ஆலோசனைகள் வழங்குவதன்மூலம் உள்;ர், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி தமிழ் பிரதேசங்களில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவி உற்பத்திகளையும் வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
- வாழைச்சேனை காகித ஆலையை பூரணமாக மீள் புனரமைத்து முழுமையாக இயங்க வைப்பதுடன், காகிதக் கூட்டுத்தாபனத் தலைவராக அல்லது பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக மட்டக்களப்பு தமிழர் ஒருவரை நியமிக்க முயற்சிகள் எடுத்தல். அத்துடன் வேப்பவட்டவான் மற்றும் வாகரை ஆகிய இடங்களில் ஓட்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்தவும் மற்றும் வாகரையில் பழரச தொழிற்சாலை ஒன்றினை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
- படுவான்கரை மற்றும் வாகரைப் பிரதேசங்களில் பொருத்தமான இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- படுவான்கரை பிரதேசங்களிலும் மற்றும் ஏனைய பொருத்தமான இடங்களிலும் இலத்திரனியல் வெதுப்பகங்களை (பேக்கரி) உருவாக்க நடவடிக்கை எடுத்தல்.
- மரவேலை, கைத்தறி நெசவு, மட்பாண்டத் தயாரிப்பு, பன்புல் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தமான பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்து அதில் ஈடுபடுபவர்களுக்கும், ஈடுபட விரும்புவர்களுக்கும் நவீன முறையிலான தொழிநுட்பப் பயிற்சிகளை வழங்கி, பயிற்சி முடிந்து வெளியேறுபவர்களுக்கு சுயதொழிலில் ஈடுபடுதற்கான உபகரணங்களையும், நிதி உதவிகளையும் அளித்து சந்தைவாய்ப்புள்ள தரமான, கவர்ச்சிகரமான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்தல்.
- ஜேர்மன் இயந்திரத் தொழிநுட்பக் கற்கை நெறிப் பாடசாலை ஒன்றை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளல்.
- சுயதொழில் துறைகளில் இளைஞர்;களையும், பெண்களையும் கூடுதலாக ஈடுபடுத்தும் நோக்குடன் அவர்களுக்கு தொழில் சந்தை தொடர்பாகவும், சுய தொழிலின் மகத்தும் தொடர்பாகவும், பிறரிடம் கையேந்தும் தொழிலில் ஈடுபடுத்துவதால் ஏற்படும் இழிநிலை தொடர்பாகவும், சிறுமுயற்சிகளில் ஈடுபட்டு சுய உழைப்பால் உயர்ந்த நிலையிலுள்ளவர்களின் அனுபவங்கள் தொடர்பாகவும் தெளிவூட்டி, அவர்களுக்கு மன உறுதியையும், தன்நம்பிக்கையும் ஊட்டுவதற்கான விழிப்புணவூட்டும் நிகழ்ச்சி திட்டங்களையும் தயாரித்து நடைமுறைபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை முதலில் சிறு சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட வைத்து பெரிய தொழில் முயற்சியாளரகளாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
சுற்றுலாத்துறை
- சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதுடன் அவற்றுக்கான பாதைகள், போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள், உணவகங்கள், ஓய்வெடுக்கும் நிலையங்கள், வியாபாரத் தலங்கள் என்பவற்றையும் விளம்பர பலகைகளையும் ஏற்படுத்தல்.
- சுற்றுலாத் தகவல் நிலையம் ஒன்றை நிறுவி அதில் சுற்றுலா மையங்கள் தொடர்பான வரை படங்கள், அவைகளின் முக்கியத்துவம், ஹோட்டல்கள் விபரம், சுற்றுலா வழிகாட்டிகள் விபரம், பாதை வரைபடங்கள், வாடகை வாகனங்கள் தொடர்பான விபரம் என்பவற்றையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட கையேடு ஒன்றை தயாரித்து வைத்திருந்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்வதுடன், பலதரப்பட்ட ஊடகங்கள் மூலம் பிரபல்யப்படுத்தவும் ஏற்பாடு செய்தல்.
- சுற்றுலா பயணிகள் வருகை தரக்கூடிய இடங்களில் அவர்களைக் கவரக் கூடிய வகையில் உள்;ர் வளங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட கவர்ச்சிகரமான கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதிசேர் பதனிடப்பட்ட தரமான முறையில் கவர்ச்சிகரமாக பொதியிடப்பட்ட உள்;ர் தயாரிப்புக்களான தானிய உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், இயற்கைக் குடிபானங்கள் என்பவற்றை விற்பனை செய்யும் நிலையங்களை ஏற்படுத்துவதுடன், அவற்றை தயாரிப்பதற்கான நவீன தொழிநுட்ப பயிற்சிகளையும் உபகரணங்களையும் பெண்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- ஹோட்டல் முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்து இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சி அளிப்பதுடன் வெளிநாட்டு மொழிகளைகற்பிக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- மட்டக்களப்பு வாவிகளுக்கூடாக சொகுசுப் படகு சேவைகளை நடத்த ஏற்பாடு செய்வதுடன், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இறங்கு துறைகளையும் தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தல்.
- மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை பிரதான சுற்றுலா மையமாகப் பேணுவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உள்;ர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக அதை மாற்றியமைத்தல்.
- கிழக்குமாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தைச் சக்திமிக்கதாக வலுப்படுத்துவதுடன், சுற்றுலா சம்பந்தமான பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பில் நிறுவ நடவடிக்கை எடுத்தல்.
சுகாதார சேவைகள்
இலங்கையில் இலவச மருத்துவசேவை அரசாங்கத்தினால் நடத்தப்பட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தூரப்பிரதேசங்களிலுள்ள பின் தங்கிய கிராம மக்களுக்கு அந்த சேவை அரிதாகவே கிடைக்கிறது. சில இடங்களில் வைத்தியசாலைகள் இல்லை. சில இடங்களில் வைத்தியசாலைகள் இருந்தாலும் கூட அங்கு வைத்தியர்கள், வேறு உத்தியோகத்தர்கள், போதிய வளங்கள் இல்லாமையால் மக்களுக்கு உரிய பயன் கிடைப்பதில்லை. இவற்றை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்குப் பின்வரும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் : Cardiac Catheeter Laboratory ஒன்றைப் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இருதய நோய் சிகிச்சை பிரிவில் உடனடியாக ஏற்படுவதுடன், அதற்கு தேவையான சகல மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தல். Supply and fix of Cardiac Catheeter Laboratory to the newly constructed cardiology unit and necessary clinical and technical requirements.
- 128 துண்டுகளுக்கு மேல் பெற்று இயங்கக் கூடிய புதிய சீரீ(ஊவு) - ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெற்று புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் விபத்து மற்றும் அவசர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் பொருத்த உடனடி நடவடிக்கை எடுத்தல். Supply and fix of new more than 128 slices CT- Scaner at newly constructed accident and Emergency care unit.
- முழுமையான புதிய எம்ஆர்ஐ (MR) ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெற்று பொருத்த உடனடி நடவடிக்கை எடுத்தல். Supply and ix a new MRI - Scanner
- உடனடியாக சட்டவைத்தியப் பிரிவை முழுமையாக இயங்க வைக்க நடவடிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக சட்ட வைத்திய நிபுணர் ஒருவரை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுத்தல்.
- வைத்தியசாலை நிர்வாகப் பகுதி பிரதிப் பணிப்பாளர், பதவி மற்றும் வைத்திய நிபுணர்களுக்கும், வைத்திய அதிகாரிகளுக்கும், மருத்துவதொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும், தாதிஉத்தியோகத்தர்களுக்கும் நிலவும் வெற்றிடங்களை கூடுமான அளவு நிரப்புவதற்கான சகல முயற்சிகளையும் சகல மட்டங்களிலும் மேற்கொள்ளல்.
- சத்திரசிகிச்சை கூடங்களையும், அதிதீவிர கண்காணிப்புபிரிவுகளையும், நோயாளர் விடுதி வசதிகளையும் கூடுமானளவு அதிகரிக்கச் சகல முயற்சிகளையும் எடுத்தல்.
- தேவையான வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், ஏனைய சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், தேவையான உபகரணங்கள் அனைத்தையும் கூடுமானளவு வழங்கி போதனா வைத்தியசாலையில் உள்ள சகல பிரிவுகளும் திறமையான முறையில் முழுமையாக இயங்குவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்தல்.
- புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்துவதுடன் அதை முழுமையாக இயங்க வைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல்.
- வைத்தியசாலையின் கழிவகற்றும் செயல்பாடுகளில் நிலவும் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து, கழிவகற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாகவும், சுமுகமாகவும் நடை பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக எடுப்பதுடன், வடிவமைப்புகளைச் சீரமைப்பதுப் புனரமைப்பதுடன் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- வைத்தியகாப்புறுதி வசதி இல்லாத வசதி குறைந்த மக்களுக்கு அவசரமாக செய்யப்பட வேண்டிய அவசர சத்திர சிகிச்சைகளை அரசாங்க வைத்தியசாலைகளில் செய்யாமல் காலத்தை இழுத்தடிப்பதன்மூலம் தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணச் செலவில் செய்விக்கும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும் நிலைமையை இல்லாமல் செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை வைத்தியசாலை பணிப்பாளர், அத்தியட்சகர்களுடனும், சத்திரசிகிச்சை நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- திராய்மடுவில் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்களுக்கான வதிவிடங்களையும் தொடர் மாடிக் குடியிருப்புகளையும் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
மேலும் :
- களுவாஞ்சிகுடி மற்றும் வாழைச்சேனை தளவைத்தியசாலைகளைப் பூரணமாகப் புனரமைத்து விபத்து மற்றும் அவசர சேவைப்பிரிவு, சட்டவைத்தியப் பிரிவு, நோய் நிர்ணயப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்துவதுடன், விஷேட வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்களுக்கான விடுதிகளையும், மேலதிக நோயாளர் விடுதிகளையும் அமைப்பதுடன் தேவையான வைத்திய அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுத்தல்.
- கரடியனாறு, மண்டபத்தடி, கதிரவெளி, மகிழடித்தீவு, நாவற்காடு, செங்கலடி, மண்டூர், சந்திவெளி, ஆரையம்பதி, ஆகிய பிரதேச வைத்தியசாலைகளை புனரமைத்து நோயாளர் விடுதிகள், மருந்துக் களஞ்சியங்கள், வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள், கழிவு நீர் அகற்றும் முறை, வடிகால் அமைப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகள் ஏற்படுத்தப்படுவதுடன் நோய் நிர்ணயப்பிரிவு, படமெடுக்கும் பிரிவு, மருத்துவ ஆய்வுகூடம் என்பவற்றையும் ஏற்படுத்தி அவற்றுக்கான ஆளணிகளையும், வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்தல்.
- வாகரை, மாவடிவேம்பு, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைகளை முழுமையாக புனரமைத்து சகல வசதிகளுடன் கூடிய தள வைத்தியசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல்.
- அம்புலன்ஸ் வசதிகள் இல்லாத வைத்திய சாலைகளுக்கு அம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- மடடக்களப்பின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மிகவும் பின் தங்கிய தூரப்பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் ஏற்படும் பிரசவ மரணங்களைத் தடுப்பதற்காக ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் அவற்றை நிறுவுவதுடன், சுகாதார வைத்திய அதிகாரிகளின் சிகிச்சைகளும், பொதுமருத்துவ மாதுகளின் களப்பரிசோதனைகளும் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யவும், கற்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இளவயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவற்கும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அப்பகுதிகளில் பாரம்பரிய மருத்துவிச்சி சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு மிக அவசரகாலங்களில் மட்டும் இக்கட்டான நிலமைகளைச் சமாளிப்பதற்கான அவசர முதலுதவிச் சிகிச்சை முறைகள் சம்பந்தமான முறையான பயிற்சிளை சம்பந்தபட்ட பிரதேசசுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக வழங்கி அவர்களால் உபயோகிக்க கூடிய மருந்துப் பொருட்கள், இலகுவான முதலுதவி பொருட்கள் அடங்கிய பொதியொன்றை அவர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக ஆலோசித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச்சுகாதார மருத்துவமாதுகள் ஆகியோரின் விரிவாக்க சேவைகளை வலுப்படுத்தி அவற்றைச் செயல்திறன் உள்ள முறையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தல்.
- வைத்தியவசதி குறைந்த பிரதேசங்களில் வைத்திய வசதிகளை மேம்படுத்தவும், வைத்தியசாலைகள் இல்லாத பின்தங்கிய பிரதேசங்களில் பொருத்தமான இடங்களில் மத்திய மருந்தகங்களையும், ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களையும் புதிதாக நிறுவி இயங்கவைக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- மட்டக்களப்புநகரம், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, செங்கலடி, வாழைச்சேனை ஆகிய இடங்களில் அரச “ஒசுசல” மருந்து விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல்.
- கஷ்டப் பிரதேசங்களில் நிலவும் தாதி உத்தியோகத்தர்கள் உட்பட சகல பல்வேறுபட்ட மருத்துவத் தொழில் நுட்பச்சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்காக க. பொ.த. (உ.த) கலை, வர்த்தக பிரிவுகளில் சித்தியடைந்தவர்களையும் உள்ளடக்கக் கூடியதாக வைத்தியசாலை ரீதியாக வெற்றிடங்கள் குறிப்பிடப்பட்டு, அப்பிரதேசங்களில் உள்ள கிராமசேவை பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அமைச்சரவை அனுமதியுடன் விஷேட போட்டிப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டு, அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தேவையான தகுந்த முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆகக் குறைநதது 20 ஆண்டுகள் குறிப்பிட்ட அப்பிரதேச வைத்தியசாலைகளிலேயே கட்டாயமாகச் சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- சுதேச மருத்துவத்துறையை அபிவிருத்திசெய்யும் பொருட்டு புதுக்குடியிருப்பு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையை புனரமைத்து விரிவுபடுத்துவதுடன், தேவையான வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும் அங்கு மூலிகைத்தோட்டம், மருந்துக்களஞசியம், மூலிகைகள் வழங்கும் நிலையம், மேலதிக நோயாளர் விடுதிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் ஏனைய உத்தியோகத்தர்களுக்கான விடுதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- தூரப்பிரதேசங்களில் உள்;ள பின்தங்கிய கிராமங்களிலும் ஆயுள்வேத வைத்தியசாலைகளையும், பஞ்சகர்ம சிகிச்சை நிலையங்களையும் மூலிகைத் தோட்டங்களையும் நிறுவ நடவடிக்கை எடுத்தல்.
- ஆயுள்வேத சிகிச்சை முறைகளை மேற்கத்திய ஆங்கில வைத்திய முறைகளுடன் இiணைத்து மேறn; காளவ் தறக் hன நடவடிகi; ககளை எடுபப் துடன,; இது சமப் நத் மான விழிபபு; ணரவு; ூடடு; ம் நடவடிகi; ககளை இரண்டு சிகிச்சை முறைகளையும் அளிக்கும் வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளல்.
- பாரம்பரிய சித்தவைத்திய முறை, ஹோமியோபதி வைத்தியம், அக்குப்பஞ்சர், யுனானி வைத்தியம் மற்றும் பாம்புக்கடி வைத்தியம், முறிவு வைத்தியம் ஆகிய வைத்திய சிகிச்சை முறைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து உதவி செய்வதுடன் அவர்களுக்குச் சொந்தமான மூலிகைத்தோட்டம் அமைப்பதற்கும் மூலிகைகள், மருந்துப் பொருட்கள் பெறுவதற்கும் உதவி வழங்குதல்.
- மிகவும் தூரப்பிரதேசங்களிலுள்ள போக்குவரத்து வசதிகள் குறைந்த பின் தங்கிய கிராமங்களில் பாம்புக்கடி, ஏனைய திடீர்ச்சுகயீனங்கள், வெட்டுக்காயங்கள், முறிவுகள் போன்ற எதிர்பாராத சுகயீனங்கள் ஏற்படும்பொழுது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வரைக்கும் இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதற்காக அவசர முதலுதவிகளை வழங்குவதற்காக இக்கிராமங்களில் உள்ள சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்குத் தேவையான முதலுதவிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி முதலுதவிக்குரிய மருந்துப் பொருட்கள் அடங்கிய முதலுதவிப்பெட்டிகளை வழங்குவதுடன், பாடசாலைகளுக்கும் தேவையான வேறு இடங்களுக்கும் முதலுதவிப் பெட்டிகள் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வு கூடங்கள், மருந்து விற்பனை நிலையங்களின் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்தி பொதுமக்களை சுரண்டாத வகையிலும், சுற்றாடலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அவைகளின் நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட சம்பந்தபட்ட சகல அரசாங்க திணைக்களங்களின் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கைகளை மேம்படுத்தி துரிதப்படுத்தி அவைகளை செயற்றிறன் மிக்கவைகளாக இயங்கவைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இது சம்பந்தமாக பொது மக்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கான ஒரு கருமபீடத்தையும் சம்பந்தபட்ட திணைக்களங்களில் உருவாக்க நடவடிக்கை எடுத்தல். அத்துடன் பல்வேறுபட்ட ஊடகங்களில் இது சம்பந்தமாக வரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தல்.
- தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறும் திண்மக்கழிவுகளில் ஆபத்தான கழிவுகள், தொற்றக்கூடிய கழிவுகளும், ஏனைய கழிவுகள் என்பவற்றைத் தரம்பிரித்து அகற்றுதல் மற்றும் அழித்தல், அத்துடன் உடலிலிருந்து எடுக்கப்படும் உடல் கூற்றுக்கழிவுகளை முறைப்படி அகற்றுதல் ஆகிய நடவடிக்கைகளில் முறைகேடுகள், ஊழல்கள், சட்டத்துக்கு முரணான தகாத நடவடிக்கைகள் காரணமாகப் பொதுமக்களுக்கும், சுற்றாடலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒரு ஒழுங்குமுறையான செயல்திட்டத்தையும் ஏற்படுத்துதல்.
- தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆய்வுகூடங்களில் நடைபெறும் சேவைகள் மற்றும் கட்டணங்கள் அறவிடுதல் என்பன அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து மேற்பார்வை செய்வதற்கான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளல்.
- கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வைத்தியப் பரிசீலனைகள் நடைபெறும்போது அவ்விடங்களில் அவர்கள் சௌகரியமாக அமர்ந்து சிகிச்சைகளில் கலந்துகொள்ளக்கூடிய ஆரோக்கியமான, சுகமான இருக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
கல்வி
புள்ளிவிபரங்களின்படி ஆசிரியர்கள் நியமனம், வளப்பகிர்வு என்பன மிகவும் பாரபட்சமான முறையில் இடம்பெறுவதால் மட்டக்களப்பில் உள்ள கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும், கல்குடா கல்வி வலயமும் மிகவும் மோசமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச கல்வியின் பயன் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள சமூகத்திற்கு மறுக்கப்படுகின்றது. இதனால் அரசியல்அமைப்பு சட்டத்தின்மூலம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை ஒரு பகுதி மக்கள் அனுபவிக்க முடியாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்த அநீதியான நடவடிக்கைகளை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் பயிற்றப்பட்ட மற்றும் கணிதம், விஞ்ஞானம், தொழினுட்பம், தகவல் தொழினுட்பம், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறுகியகால, நீண்ட கால அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்படுவதுடன், பௌதீக வளங்களைக் கூட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறுகியகால திட்டமாக அப்பகுதியில் வெளியில் இருந்து கற்பிக்கவரும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் உட்பட விஷேட ஊக்குவிப்புத் தொகை ஒன்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் விஷேட அனுமதிபெற்று அத்துறையில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அத்துறையில் தேர்ச்சி பெற்று வேறு தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கு விஷேட ஏற்பாடொன்றின்மூலம் கொடுப்பனவுகளை வழங்கி பகுதிநேர அல்லது மேலதிக வகுப்புக்களை நடாத்த ஒழுங்குகள் செய்தல்.
- நீண்டகாலத் திட்டமாக கஷ்டப்பிரதேசங்களில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல்தொழில்நுட்;பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக் கூடிய பட்டதாரி மற்றும் அதையொத்த வேறு தகைமைகளைக் கொண்டவர்களை ஆசிரியர்களாகத் தெரிவு செய்வதற்காகவும், க. பொ. த. (உ.த) பரீட்சையில் சித்தியடைந்தவர்களைப் புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காகவும் அமைச்சரவை விஷேட அனுமதிபெற்று அப்பிரதேச கல்வி வலயங்களில் நிலவும் வெற்றிடங்களின் விபரம் குறிப்பிடப்பட்டு அப்பிரதேச பாடசாலைகள் உள்ள பிதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராம சேவகர் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கே நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விஷேட போட்டிப் பரிட்சை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆகக்குறைந்தது 20 ஆண்டுகள் குறிப்பிட்ட அப்பிரதேசப் பாடசாலைகளிலேயே கட்டாயமாகச் சேவையாற்ற வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- ஏழைக் குடும்பங்களிலுள்ள திறமையான பிள்ளைகளை ஒரு தகுந்த பொறிமுறை மூலம் இனங்கண்டு அவர்களை பிரபல பாடசாலை விடுதிகளில் தங்கவைத்து படிப்பிப்பதுடன், பல்கலைக்கழகம் வரை படிப்பதற்கும், வெளியிலிருந்து விஷேட வளவாளர்களை வரவழைத்து க.பொ.த.ப (உ.த) வகுப்புக்களில் பயிலும் மாணவர்களுக்கு விஷேட வகுப்புக்களை நடத்துவதற்காகவும் மேலும் கஷ்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்;பம், தகவல் தொழிநுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஒப்பந்த அடிப்படையில் படிப்பிப்பவர்களுக்கு கொடுப்பனவுகளையும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காகவும் தொழில் அதிபர்கள், கொடைவள்ளல்கள், நலன் விரும்பிகள், செல்வந்தர்கள், வியாபாரிகள், சமயத்தலங்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆகியோரிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற்று “கல்வி நிதியம்” ஒன்றை ஏற்படுத்தி, அதைப் பதிவு செய்து சமுகத்தில் மதிப்பு வாய்ந்த கல்வி மான்களை கொண்ட ஒரு குழுவிடம் அதன் நிர்வாகத்தையும், நடவடிக்கைகளையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தல்.
- தேசியக் கல்வியியல் கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், சில தொழில்நுட்பக் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்களில் மட்டும் இடம்பெறும் தொழில் வாய்ப்பைப் பெறக்கூடிய சில விஷேட கற்கை நெறிகளுக்கும், சட்டமானிக் கற்கை நெறிகளுக்கும், சட்டக்கல்லூரிக்கும் அனுமதிபெறத் தேவையான தகுதியைப் பெறக்கூடியதான பாடங்களைத் தெரிந்து எடுத்து, அவற்றை விஷேட தகுதியுடைய ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதற்காகக் கொத்தணி முறையில் பிரதேசரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட சில பாடடசாலைகளில் மட்டும் க.பொ.த.(உ.த) வகுப்புக்களை ஏற்படுத்தி, அப்பாடங்களைக் கற்பித்து அப்பயிற்சி நெறிகளுக்கு அனுமதி பெறக்கூடிய வகையில் திட்டமிட்டு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் கல்வி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- கஷ்டமான தூரப்பிரதேசங்களிலிருந்து பிரபல பாடசாலைகளுக்கு கல்வி கற்பதற்காகவரும் பிள்ளைகள் குறித்த நேரத்துக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கும் ஏற்றதாக குறிப்பிட்ட அந்த பிரதேசங்களுக்கு இ.போ.ச விஷேட பாடசாலை பஸ் சேவைகளை ஏற்பாடு செய்தல்.
- மட்டகக்ளப்பு மேற்கு கல்வி வலயம் மற்றும் கல்குடா கல்வி வலயங்களில் மாணவர் விடுதி வசதிகள், மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கான வதிவிடங்கள், ஆய்வுகூட வசதிகள், விளையாட்டு மைதானங்கள், ஒன்று கூடல் மண்டபங்கள் ஆகியவகைகளைக் கொண்ட பிரபல பாடசாலைகளுக்கு நிகரான வகையில் மிக உயர்ந்த தரத்தைக் கொண்ட ஐந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதுடன், ஏனைய சில பாடசாலைகளில் விடுதி வசதிகளை ஏற்படுத்தல்.
- பாடசாலைகளில் உடற்பயிற்சிக் கல்வி, தலைமைத்துவப் பயிற்சிகள், மனித மேம்பாட்டு விருத்திக் கல்வி என்பவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தல்.
- அதிகஷ்டப் பிரதேசங்களில் சில கிராமங்களில் பாடசாலைகள் இல்லை. அத்துடன் சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆறாம் வகுப்பிற்கு மேல் வகுப்புகள் இல்லை. சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆறாம் வகுப்பு வரைப் படித்த பிள்ளைகளுக்கு எழுத, வாசிக்கக் கூடத் தெரியாத துர்ப்பாக்கிய நிலைகூடக் காணப்படுகிறது. சில பாடசாலைகளில் இடைநிiலைக் கல்விக்கு இடமில்லை. சில கிராமங்களில் பாடசாலைகள் இருந்தாலும் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் தொடர்ந்து படிக்கமுடியாதுள்ளதாலும், வறுமையாலும் அதிகளவான பிள்ளைகள் இடைவிலகி சிறுவர் கூலித்தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கான சகலவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேவேளை இந்நிலமை காரணமாக இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் எழுத்தறிவற்ற காண்டுமிராண்டிச் சமூகம் உருவாகிக் கொண்டுள்ளது. இந்த நிலமைகளை அனுமதிப்பது இலவசக்கல்வி உள்ள ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. எனவே இவற்றைப் போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- வலது குறைந்தோருக்கும், விஷேட தேவை உடையவர்களும் விஷேட கற்கைமுறைப் பாடசாலைகளை ஏற்படுத்துவதுடன், முறைசாராக் கல்வியை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பெண்களுக்கான விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்வதுடன், தாய்மார்களுக்கான வகுப்புகளை ஏற்பாடு செய்து விசேட வளவாளர்களைக் கொண்டு தாய்மாரின் குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு, கல்வியூட்டல் மற்றும் சமூகப் பொறுப்புகள், கடமைகள் சம்பந்தமான விழிப்புணர்வூட்டும் செயல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிழக்குமாகாண முன்பள்ளிக் கல்வி பணியகத்தை வலுவுள்ளதாக்குவதுடன், கூடுதலாக முன்பள்ளி ஆசிரியர்களை நியமித்து உரிய பயிற்சிகளை அளித்து போதிய ஊதியத்தையும் வழங்கி, முன்பள்ளி நடவடிக்கைகளை மீளமைத்தல். அத்துடன் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள கிராமங்கள் தோறும் முன்பள்ளிகளை நிறுவி இயக்குவதுடன், முன்பள்ளிப் பாடவிதானத்தில் மனித விழுமியக் கல்வியையும் சேர்த்து அதில் தேர்ச்சிபெற்ற வளவாளர்களைக் கொண்டு அக்கல்வியை குழந்தைகளுக்குப் புகட்டவும் நடவடிக்கை எடுத்தல்.
- திறந்த பல்கலைக்கழகம், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் விஷேட தொழில் துறை பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் மூலம் இலவசமாகவும், மானிய அடிப்படையிலும் வழங்கப்படும் வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய திறன் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோரைத் தூண்டுவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் தங்களால் வழங்கப்படும் கற்கை நெறிகள், பயிற்சிகள் அதன் பயன்பாடுகள், தேவைப்பாடுகள் சம்பந்தமாக தொழில்சந்தை, கண்காட்சிகள், நடமாடும் சேவைகள் நடத்துவதன் மூலம் இளைஞர், யுவதிகளிடையேயும், பாடசாலை மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும், விழிப்புணர்வை ஊட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி தூண்டுதல்.
- திறந்த பல்கலைக்கழக சட்டமானிப் பட்டத்துக்கு அனுமதிப்பதற்கான போட்டிப்பரீட்சை மற்றும் சட்டக் கல்லூரிக்கு அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கான தயார்படுத்தல் வகுப்புகளை நடத்துவதில் திறமைபெற்ற விஷேட வளவாளர்களை வரவழைத்து அவர்களைக்கொண்டு மட்டக்களப்பில் வகுப்புக்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
- கிழக்குப் பல்கலைக்கழகம் வெறும் பட்டதாரிகளை மட்டும் உருவாக்கும் ஒரு நிறுவனமாக மட்டும் செயற்படாமல், பிராந்தியத்திலுள்ள சமுகம் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகள் அவை சார்ந்த ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் உள்;ர் மூலவளங்கள் பற்றியும், அவைசார்ந்த உற்பத்திப்பொருட்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பெறுமதிசேர் கைத்தொழில்துறைகள், முதலீடுகள், வணிகம், தொழில்முயற்சியாண்மை, பால்நிலைச் சமத்துவம், புவியியல், காலநிலை மாற்றம், பேண்தகு சுற்றாடல், பேண்தகு விவசாயம், சுகாதாரம், பண்டயவரலாற்றுத் தொன்மை, புராதன வழிபாட்டுத் தலங்கள், வழிபாட்டு முறைகள், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புக்களையும், புத்தாக்கங்களையும் உருவாக்குவதில் பிராந்தியம் சார்ந்த சமுகத்துக்குப் பயன்தரத்தக்கவகையில் பலதரப்பட்ட விடயங்களையும், ஆலோசனைகளையும் எடுத்துக்கூறக்கூடிய ஒரு புத்தி ஜீவிகளைக் கொண்ட பெருமையும், கௌரவமும், நன்மதிப்பும், மரியாதையும் மிக்க அறிவுக்கருவூலமான ஒரு சாந்தி நிவேதனமாக மிளிரவேண்டும் என்பதற்காகச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல்.
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மேலும் தொழில் நுட்ப கற்கை நெறிகளுக்கான பீடம், சட்டபீடம் போன்ற புதிய பீடங்களை உருவாக்க முயற்சிகள் எடுப்பதுடன், தொழில் புரிவோர்க்கான பல தரப்பட்ட துறைசார்ந்த திறன் தொழில்தகைமைகளை வழங்கக்கூடிய பகுதி நேர டிப்ளோமா கற்கை நெறிகளையும், தொழில் சந்தைக்கேற்ற தகைமைகளை வழங்கக்கூடிய கற்கை நெறிகளையும் தொடங்கி நடத்தவும் நடவடிக்கை எடுத்தல்.
வீடமைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடில்லா பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. பின்தங்கிய கிராமமக்களும், போரினால் அழிக்கப்பட்ட கிராம மக்களும் தொடர்ந்தும் வீடில்லாப் பிரச்சினையை அனுபவித்து வருகின்றனர். பல வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டாலும், மக்களை முழுமையாக அவை சென்றடையவில்லை. எனவே இவற்றை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- போரினால் பாதிக்கப்பட்டு அழிந்து போன கிராமங்களான பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிளியாமடு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலந்தனை, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புல்லுமலை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை மற்றும் இது போல போரினால் பாதிக்கப்பட்டுள்ள சகல கிராமங்களிலும் தேவையான வீடுகள், குடிதண்ணீர், மின்சாரம், மலசலகூட வசதிகள், வீதிகள், பாடசாலைகள், போக்குவரத்து வசதிகள், பொதுக் கட்டிடங்கள், வணக்கதலங்கள் போன்றன அமைக்ப்பட்டு மாதிரி கிராமங்களாக உருவாக்கப்படும்.
- மேலும் ஏனைய பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்தி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
- முன்னாள்; போராளிகள் குடும்பங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விஷேட தேவை உடையோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்தல்.
- தேவையான இடங்களில் புதிய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகளுடனும் கூடிய வீடுகள் உட்பட சகல சேவைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்
- வீடுகள் அற்றவர்கள் வீடுகள் அமைப்பதற்கும், வீடுகளை திருத்துவதற்கும் இலகு வீடுஅமைப்புக் கடன் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஊடகவியலாளர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மட்டக்களப்பு கல்லடி மற்றும் சித்தாண்டி, முறக்கட்டஞ்சேனை பகுதிகளில் வாழும் சலவை, கள்ளு இறக்கும் தொழிலாளர்களுக்கும் சிகை அலங்கரிக்கும் தொழிலாளர்களுக்கும் இருப்பிட வசதிகள் இன்றி கஷ்டப்படும் நிலையைப் போக்குவதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அவர்களுக்கான தொடர் மாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல்.
- புதிய மாவட்ட செயலகம் அமைக்கப்படும் திராய்மடுப் பிரதேசத்தில் அரச உயரதிகாரிகளுக்கான வதிவிடங்களும், ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான தொடர் அடுக்குமாடி வதிவிடக் கட்டிடத் தொகுதிகளும் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதிகளும் பாலங்களும்
- வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் பராமரிக்கப்படும் வீதிகள், பாலங்கள், மதகுகளைப் புனரமைப்பதுடன், மட்டக்களப்பு மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலுள்ள கிராமங்களைப் பிரதான வீதிகளுடன் இணைக்கும் புதிய வீதிகளையும், பாலங்களையும் அமைத்தல்.
- உள்ளுராட்சி சபைகள், நீர்ப்பாசனத்திணைக்களம், விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சகல வீதிகளையும் புனரமைப்பதுடன், புதிய வீதிகளையும் அமைத்தல்.
- சந்திவெளி- திகிலிவெட்டை பாலம், நரிப்புல் தோட்டம் பங்குடாவெளிப் பாலம், மண்டூர்- குறுமண்வெளி பாலம், கிண்ணையடிப்பாலம், குருக்கள்மடம்- அம்பிலாந்துறை பாலம், ஆகிய பாலங்களையும் அதனுடன் தொடர்புபட்ட வீதிகளையும் அமைத்தல்.
- வள்ளியாற்றில் உரிய பாலங்களை அமைத்து அதனுடன் தொடர்புடைய வீதிகளையும் நிர்மாணித்தல்.
- மயிலவெட்டுவான் ஆற்றில் பாலம் அமைத்து, மயிலவெட்டுவான்- ஈரளக்குளம் வீதியை அமைத்தல்.
- மண்டூர் மூங்கில் ஆற்றுப் பாலத்தையும், காக்காச்சிவட்டை, சின்னவத்தை வீதியையும் புனரமைத்தல்.
- வவுணதீவு- கரவெட்டி- மகிழவட்டுவான் வீதியை புனரமைத்தல்.
- அம்பிளாந்துறை – வீரமுனை வீதியை புனரமைத்தல்.
- ஆறுமுகத்தான்குடியிருப்பு- சவுக்கடி- பாலமீன்மடு வீதியை புனரமைப்பதுடன், அவ்வீதியைச் சவுக்கடியிலிருந்து பாசிக்குடாவரை விஸத்;தரிக்க நடவடிக்கை எடுத்தல்.
- நாசிவன்தீவு – வாழைச்சேனை துறைக்கு இயந்திரப் படகு சேவை ஏற்பபடுத்தல்.
- மட்டக்களப்பு விமானப்படை வீதியை புனரமைத்துப் போக்குவரத்துக்காகத் திறப்பதுடன், அதை ஊறணிச் சந்தியுடன் இணைத்தல்.
- ஓட்டமாவடி- வாகனேரி வீதியை புனரமைத்து, கிரான் - மியாங்கல் வீதியுடன் இணைத்தல்.
- அம்பிளாந்துறை- கொக்கட்டிச்சோலை, மண்முணை – தாளங்குடா வீதியைப் புனரமைத்தல்.
- மாவடிஓடைப் பாலம், தாம்போதி மற்றும் அதனுடன் இணைந்த வீதிக் கட்டமைப்புக்களை புனரமைத்தல்.
- கல்குடா கடற்கரை வீதியைப் புனரமைத்தல்.
- களுவன்கேணி வீதியைப் புனரமைத்தல்.
- கல்லோயாத்திட்ட சகல குடியேற்றக் கிராம வீதிகளையும் செப்பனிட்டுப் புனரமைப்பதுடன், புதிய வீதிகளையும் உருவாக்குதல்.
- ஊத்துச்சேனை- வெலிக்கந்தை வீதியைப் புனரமைத்தல்.
- கிரான்- மியன்கல் வீதியில், புலிபாய்ந்தகல் சந்தியிலிருந்து பூலாக்காடுகல்லடி வெட்டை – நாற்பத்தாவில்-பள்ளத்துச்சேனை, ஊடாக குடும்பிமலைக்கும், மற்றும் முறுத்தானை, அக்குறாணை – மினிமினித்தவெளி ஊடாக வடமுனை- ஊத்துச்சேனை வரைக்கும் புதிய வீதியமைப்பை உருவாக்குதல்.
- புலிபாய்ந்தகல்- பேரில்லாவெளி- கோராவெளி, 5ம்கட்டைச்சந்தி கக்கிளாச்சோலை வரையிலான வீதியைப் புரனமைத்தல்.
- சித்தாண்டி நாகதம்பிரானடியிலிருந்து மகிழயடிக்கட்டு ஊடாகவும் சின்னாளன் குளக்கட்டு இடப்புறம் ஊடாகவும் சிவத்தபாலத்தடிவரைக்கும் புதிய வீதியமைப் பொன்றை உருவாக்கி, அதை மயிலவட்டுவான், ஈரளக்குளம் வீதியுடன் இணைத்தல். அத்துடன் அவ்வீதியை சின்னாளன் குளம் வலப்;புறக்கட்டு ஊடாக, ஈரளக்குளம்வரை செல்லும் வீதிக்கட்டமைப்பைப்பொன்றை உருவாக்குதல்.
- அம்பாறை- மட்டக்களப்பு எல்லையிலிருந்து வெல்லாவெளி, பட்டிப்பளை வவுணதீவு, செங்கலடி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளை இணைத்து ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதி ஒன்றை ஏற்படுத்தி, அதை மட்டக்களப்பு - பொலநறுவை வீதி வெலிக்கந்தைச் சந்தியுடன் இணைத்து, அதனுடன் ஏனைய உப வீதிகளையும் இணைக்கும் விதமாக ஒரு வீதிக்கட்டமைப்பு வலைபின்னல் ஒன்றை மட்டக்களப்பு மேற்கு மற்றும் வடக்குப் பிரதேசத்தை உள்ளடக்கியதாக அமைப்பதுடன், அவ்வீதியின் இடையிடையே பட்டணங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுத்தல்.
குடி நீர் வழங்கலும், சுகாதாரமும்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் வாழும் மக்களில் 57 வீதமானவர்கள் குடி நீர் இன்றி கஷ்டப்படுகின்றார்கள். அவர்கள் குடிநீரைப் பொறுவதற்க்காக 400-500 மீற்றர் நடந்து செல்வதுடன், சிலவேளை மைல் கணக்கிலும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களேயாகும். இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- உன்னிச்சைக்குள நீர் விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி, உன்னிச்சை, ஆயித்தியமலை, மற்றும் அதை அண்டிய கிராமங்களுக்கும் மற்றும் கரடியனாறு பிரதேசத்துக்கும் நீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தல.;
- வாகனேரி நீர் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தல்.
- முறையான பரிசீலனைகளை மேற்கொண்டு தேவையான இடங்களில் ஆழ்கிணறுகள் மற்றும் ஆழமான குழாய்க் கிணறுகளை ஏற்படுத்தி, நீர்த் தாங்கிகள் அமைத்து குழாய் மூலம் நீர் வினியோகத்தை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- குழாய் நீர் விநியோகத் திட்டத்தை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி நீர் இணைப்புகளை ஏற்படுத்த முடியாத வறிய குடும்பங்களுக்கு நீர் இணைப்பை ஏற்படுத்த உதவுதல்.
- பின் தங்கிய பிரதேசங்களிலுள்ள வறிய மக்களுக்கு மலசல கூட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் ஏனைய மலசல கூடங்கள் இல்லாத குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் மலசல கூடங்களை அமைக்க உதவுதல்.
மின்சாரம்
மட்டக்ளப்பு மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடக்கிலுள்ள பின் தங்கிய பிரதேசங்களில் 20 வீதத்துக்கும் குறைவான மக்களே மின் இணைப்புக்களைப் பெற்றுள்ளனர். மேலும் அப்பகுதிகளிலுள்ள சில கிராமங்கள் கிராமிய மின்சார விஸ்த்தரிப்பு திட்டத்திற்குள் சேர்க்கப்படவில்லை. இவற்றை நிவர்த்தி செய்து அம் மக்களுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பின் தங்கிய தூரப்பிரதேசங்களிலுள்ள போரினாலும், வேறு காரணங்களினாலும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கிராமிய மின்சார விஸ்த்தரிப்பு திட்டத்தைக் கொண்டு சென்று அங்குள்ள பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள், முன்னாள்; போராளிக்குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வறிய குடும்பங்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கு மின்சார இணைப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல். அத்துடன் பிரதான இடங்களில் வீதி மின் விளக்குகளையும் பொருத்த ஏற்பாடு செய்தல்.
- சோலார் சக்தி மூலம் சில கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வழிவகுப்பதுடன், அவற்றை முறையாக மேற்பார்வை செய்து பராமரிக்கும்; பொறிமுறை ஒன்றை அக்கிராமங்களில் ஏற்படுத்தல்.
போக்குவரத்து
- மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலுள்ள சகல வீதிகளையும் போக்குவரத்துக்கேற்ற முறையில் புனரமைத்து இ.போ.ச பஸ் சேவைகள், மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், அப்பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகள் உத்தியோகத்தர்களின் வசதிக்காக சீரான முறையில் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுத்தல்.
- புலிபாய்ந்தகல், வெல்லாவெளி ஆகிய இடங்களில் இ.போ.ச பஸ் சாலைகளை அமைப்பதுடன், தேவையான இடங்களில் பஸ்தரிப்பு நிலையங்களையும் பிரயாணிகள் தங்குமிடங்களையும் ஏற்படுத்தல்.
- கிழக்குமாகாண போக்குவரத்து அதிகார சபையை வலுப்படுத்துவதுடன் தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகளின் பிரயாணக்கட்டணங்களை சீரபடுத்தவும், உரிய இடங்களில் அவற்றுக்கான தரிப்பிடங்களையும் தனியார் பஸ் நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தல்.
- பகல்நேர கொழும்பு- மட்டக்களப்புக்கான “பாடுமீன்” கடுகதிபுகயிரத சேவையை நடத்த ஏற்பாடு செய்வதுடன், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்துக்கு அண்டிப் புகையிரத நிலையம் ஒன்றையும் நிறுவுதல். அத்துடன் மட்டக்களப்பு- கொழும்பு இரவு தபால் புகையிரத சேவையில் பிரயாணிகளுக்கான பெட்டிகளை அதிகரிக்கச் செய்வதுடன், மற்றும் சிறந்த தரத்திலான உறங்கலிருக்கை மற்றும் உறங்குவதற்கான படுக்கைகளைக் கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்கவும் ஏற்பாடு செய்தல்.
வறுமை ஒழிப்பு
- இலங்கையின் வறுமை நிலைத்தரப்படுத்தல் சுட்டெண்ணின்படி முழு இலங்கையிலும் ஆகக்கூடிய வறுமையான மக்களைக் கொண்ட பிரதேச செயலாளர் பிரிவாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவு முதலாவதாகவும் அதற்கடுத்து வாகரை பிதேச செயலாளர் பிரிவும் உள்ளன. மேலும் வவுணதீவு, பட்டிப்பளை, செங்கலடி, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பரிpவுகளும் பின் தங்கிய நிலையிலே காணப்படுகிறன்றன. அத்துடன் முழு இலங்கையிலும் ஆகக்கூடிய வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களைக் கொண்ட கிராம சேவையாளர் பிரிவுகளாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை, வடமுனை கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. எனவே இந்நிலை தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை கண்டறிந்து முன்மொழிவதற்காக பல்துறை நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்களின் சிபாரிசுக்கு அமையத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- இலங்கை அரசாங்கத்தினால் நடமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சமுர்த்தி நிவாரணத் திட்டங்கள், போன்ற திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்திறன் மிக்கவைகளாகச் செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை மதீப்பிடு செய்து, அவற்றின் ஒட்டுமொத்த விளைவு மக்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறிந்து அதை மக்களுக்கு ஏற்ற வகையில் கிராமிய மட்டங்களில் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுத்தல்.
- மக்களுக்கேற்றவகையில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழ்வாதார திட்டங்களை நடைமுறைக்குச் சாத்தியமான வகையில் வடிவமைத்து நடைமுறைபபடுத்த நடவடிக்கை எடுத்தல்.
பெண்களின் ஆளுமை விருத்தியும், குழந்தைகள் பாதுகாப்பும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 சத வீதமானவர்கள் பெண்களாவர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானோர், விஷேடமாகக் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள், பிறரில்; தங்கிவாழும் நிலையில் இருப்பதனாலேயே அதிகளவான வீட்டுவன்முறைகளுக்கும் ஏனைய வன்முறைக்கொடுமைகளுக்கும் ஆளாக வேண்டிய நிலைக்குள்ளாகிறார்கள். எனவே பெண்களின் ஆளுமை விருத்திக்கு ஒரே வழி அவர்களை பிறரில் தங்கிவாழும் நிலையில் இருந்து மீட்பதாகும். இதற்கு முதலில் தயாராக வேண்டியது பெண்களேயாகும். பெண்கள் உழைப்பதால் குடும்பப் பொருளாதாரம் உயர்வடையும். இதனால் குடும்பநிலை உயர்வடைந்து, சகல விதமான குடும்பப் பிரச்சினைகளும் தீர வழி ஏற்படும். இதற்காக எமது இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மேலும் பெண்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- இலங்கையில் உள்ள பலவிதமான சட்டங்கள் மற்றும் பிரகடனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பால்நிலைச்சமத்துவம், பெண் உரிமைகளும் பாதுகாப்பும் என்பன தொடர்பான விழிப்புணர்வு பெண்களுக்கு ஊட்டப்படுவதுடன், இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும்.
- சமுகமட்ட அமைப்புக்களில் பெண்களுக்கு உறுப்பு உரிமையிலும், நிர்வாகக் குழுவிலும், தீர்மானங்கள் எடுப்பதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் சம பங்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- பெண்களை அரசியலில் ஈடுபடுத்தி, அரசியல்ரீதியில் அவர்கள் சார்ந்த விடயங்களில் சட்டங்கள் ஆக்கப்படும்போது அதில் தங்கள் தலையீட்டை செலுத்தவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், தங்கள் சமுகத்துக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவும் அவர்களுக்கு உரிமை வழங்கப்படும். எனவே அந்தவகையில் பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் வாழ்வாதாரரம், அரசியல், சமுகப் பிரச்சினைகள் சம்பந்தமாக அதை அனுபவித்து, அறிந்து, உணர்ந்த அவர்களே அதற்கான உணர்வு பூர்வமான திட்டங்களை வழங்க முடியும் என்பதற்காகத் தமிழ் மக்கள் வீடுதலைப்புலிகள் கட்சி இம்முறை பாராளுமனறத் தேர்தலில் மட்;டக்களப்பு மாவட்டத்தில் தங்கள் கட்சி சார்பில் மட்டக்களப்புப் பெண்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக அதுசம்பந்தமான அறிவும், பெண்உரிமை விடயங்களிலும், மனித உரிமை விடயத்திலும் வழக்காடி அனுபவம் பெற்ற ஒரு மனிதஉரிமைச் செயற்பாட்டு பெண் சட்டத்தரணி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி, ஏனைய கட்சிகளுக்கு முன்உதாரணமாக நடந்து காட்டியுள்ளது. அதேபோல் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் எமது கட்சிசார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல பெண்கள் பல பிரதேச சபைகளின் தவிசாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்து செயல்பட்டு சமுகத்திற்கு சேவைகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
- பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் செல்வதைத்தடுப்பதற்கான பல விழிப்புணர்வூட்டும் திட்டங்களும், அவர்களுகான பொருத்தமான வாழ்வாதார திட்டங்களும் நடைமுறை படுத்தப்படும்.
- சிறுவர் தொழிலாளர், சிறுமிகளுக்கான இளவயது திருமணம், சிறுமிகளை வீட்டுவேலைக்கு அமர்த்தல் இதனால் ஏற்படும் பாடசாலை இடைவிலகல் இவற்றைத் தடுப்பதற்காக, இலங்கையிலுள்ள கட்டாயக் கல்வி கொள்ளை மேலும் இவர்கள் சம்பந்தமான சட்டங்களை உரிய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிறுவர் பாதுகாப்பு பராமரிப்பு நிலையங்கள் முறையாகவும், உரிய சட்ட நடைமுறைகள், பிரமாணங்களுக்கு கேற்பவும் நடைபெறுகின்றதா என்பதை உரிய நிறுவனங்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தல்.
விளையாட்டு
- மாவட்டரீதியில் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் தொடர்பான நிறுவன அதிகாரிகள், விளையாடடுக்கழகப் பிரதிநிகளை கொண்ட விளையாட்டுச்சபை ஒன்றை நிறுவி மாவட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் பிரகாசிக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உருவாக்க, தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், பிரசித்தி பெற்ற விளையாட்டுக்களில் பாடசாலை மாணவர்களையும், ஏனைய விளையாட்டு வீரர்களையும் ஈடுபடுத்துவதற்கும் உரிய செயற்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
- விளையாட்டுக் கழகங்களை ஊக்குவித்து, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், பிரதேச செயலாளர் பிரிவுரீதியில் சகல வசதிகளும் கொண்ட விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல். மேலும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் சகல வசதிகளும் கொண்ட ஒரு சிறந்த விளையாட்டு மைதானமாகப் புனரமைத்தல்.
- பாடசாலைகளுக்கு இடையிலும், பிரதேச, மாவட்ட ரீதியாக விளையாட்டுக் கழங்களுக்கிடையிலும் விளையாட்டு போட்டிகளை ஒழுங்கு செய்து நடத்தல்.
- பாரம்பரிய எமது பிரதேசப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விளையாட்டுக்கள் அருகிப்போகாமல் பாதுகாப்பதற்காக கிராமரீதியாக பாரம்பரிய விளையாட்டு விழாக்களை நடத்துவதுடன், அவைகள் சம்பந்தமான வரலாற்று ஆணங்களையும் வெளியிடல்.
உள்ளுராட்சி நிர்வாகமும் பட்டண மயமாக்கலும்
- உள்ளுராட்சிச் சபைகளில் நல்லாட்சி இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதுடன். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான ஒழுக்கோவை, அவர்களின் கடமைகள், அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் உள்ளுராட்சி சம்பந்தமான சட்டங்கள் என்பவை சம்பந்தமான கைநூல் ஒன்றைத் தயாரித்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு வழங்கி விளக்கமளிக்க நடவடிக்கை எடுத்தல்.
- கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபைக்குள் வரும் முறக்கொட்டான்சேனை கிராமத்தில் துறையடி வாவி ஓரத்தில் காணப்படும் பாறையை அண்டி சிறுவர் பூங்கா மற்றும் இருக்கை வசதிகளை அமைத்து ஓய்வெடுக்கும் பூங்கா ஒன்று ஏற்படுத்தல்.
- உள்ளுராட்சி மன்றங்களினால் ஆற்றப்படும் பல்வேறுபட்ட சேவைகள் உப விதிகளை ஏற்படுத்தி நடமுறைப்படுத்துவதற்கும் தேவையான நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
- வளங்களையும், சேவைகளையும் பரவலாக்கி விரிவுபடுத்துவதற்காகவும், இலகுபடுத்துவதற்காகவும் வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிக்குடி பிரதேச சபைகளை நகரசபைகளைத் தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல். அத்துடன் இந்த நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக முறையான வீதிகள்அமைப்பு வலைப்பின்னல்களை உருவாக்குவதுடன், போக்குவரத்து வசதிகளையும் வியாபாரத் தலங்களையும் ஏற்படுத்தல்.
- திக்கோடை, புல்லுமலை, கூளாவடி, கித்துள், புலிபாய்ந்தகல், பாலையடிவட்டை போன்ற இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், வியாபாரத்தலங்களையும், பாதைகளையும், போக்குவரத்து வசதிகளையும் வீடமைப்பு திட்டங்களையும் ஏற்படுத்தி அவைகளை பட்டணமாக மாற்ற நடவடிக்கை எடுத்தல்.
- பேண்தகு சுற்றாடல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், மண்கொள்ளைக்காரர்களிடமிருந்து சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான சகலவிதமான நடவடிக்கைகளையும் அரசியல்மேல் மட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தல். மண் எடுக்கும் அனுமதிப்பத்திரங்கள்; வழங்கும் நடைமுறையை மீளாய்வு செய்து உரிய சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறும் எந்த அரச அதிகாரிகளையும் தரம்பராது சட்டத்தின் முன் நிறுத்த தேவையான ஒழுங்குகளைச் செய்தல்.
- உள்;ராட்சி சபைகளினால் நடைமுறைப்படுத்தப்படும் திண்மக்கழிவகற்றும் நடைமுறை, மீள்சுழற்சி மற்றும் சேதனப் பசளை தயாரிப்பு தொடர்பான நடைமுறைகளை ஆராய்ந்து அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதை அபிவிருத்தி, மின்சாரம், நீர்வழங்கல், வடிகாலமைப்பு போன்ற சேவைகளை திறம்பட நடத்த உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட நிர்வாகம்
- நிர்வாகத்தைப் பரவலாக்குவதற்காகவும், மக்களுக்கு இலகுவாக வழங்குவதற்காகவும் சேவைகளை இலகுபடுத்துவதற்காகவும் துரிதமாக வழங்குவதற்காகவும் மக்களின் சிரமத்தை குறைப்பதற்காகவும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு, வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை இவ்விரண்டாகப் பிரித்து புதிய பிரதேச செயலாளர் பிரிவுகளை ஏற்படுத்துவதுடன் அவற்றுக்கான புதிய பிரதேச செயலகங்களையும் நிறுவ நடவடிக்கை எடுத்தல்.
- தேவையான இடங்களில் கலாசார மண்டபங்களையும், ஒன்று கூடல் மண்டபங்களையும், ஓய்வு நிலையங்களையும் நிறுவுதல்.
- மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட சொத்துக்கள் பொருட்கள், சுவடிகள், பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த பொக்கிஷங்கள், சுவடுகள், கலைப்பொருட்கள் போன்றவைகளைச் சேகரித்து பாதுகாத்து வைப்பதற்காக அருங்காட்சியகக் காப்பகம் ஒன்றை மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்குள் ஏற்படுத்துதல்.
- அதி உச்ச அதிகாரத்தைப் பயன்படுத்தியாவது, மந்திரிசபையில் விசேட அனுமதி பெற்றாவது, அல்லது அதிமேதகு ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்தாவது மட்டக்களப்பில் உள்ள அனைத்து மதுபானசாலைகளினதும் அனுமதிப் பத்திரங்களையும் இரத்துச் செய்து, அதன்பின் அது பற்றி மீளாய்வு செய்து, தேவையான இடங்களில் மட்டும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மதுபானசாலைகளை அமைப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை புதிதாக வழங்க நடவடிக்கை எடுத்தல்.
- இளைஞர்களிடையே மதுபானம் அருந்தும் பழக்கம் மற்றும் போதைவஸ்துப் பாவனை பரவி வருவதை தடுப்பதற்கான செயற்திட்டம் ஒன்றை தயாரித்து பாடசாலை மட்டத்தில் இருந்து சமூக மட்டம்; வரை செயற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்கள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக துரோகிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைகளை வழங்கி, அதை முற்றாக ஒழிக்க தேவையான சகல நடைமுறைகளையும் எடுப்பதுடன், இது சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தல்.
மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி
மட்டக்களப்பு மாநகரத்தை “சுத்தமான நகரம்அழகிய நகரம்” நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்பவும் மற்றும் “ஆனந்தமயமான மட்டுமாநகர்” நிகழ்ச்சித் திட்டத்துக்கேற்பவும் செயல் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
- மட்டக்களப்பு மாநகரப் பகுதிகளையும், அண்டியுள்ள பிரதேசங்களையும் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், வாவியின் கொள்ளவைக் கூட்டவும், தாழ்நிலப்பிரதேசங்களை நிரப்பவும், வாவியில் படிந்திருக்கும் வண்டல்கள், கழிவுகள், மணல் திட்டுக்களை அகற்றுவதன்மூலம் மீன்வளத்தைய் பெருக்கவும் மண்முனைப் பாலத்திலிருந்து, கல்லடிப்பாலம் வரையும் மற்றும் கல்லடிப்பாலத்தடியிலிருந்து தன்னாமுனைவரையும் உள்ள வாவியை ஆழமாக்குவதுடன், கண்டல் தாவரங்களையும், கரையோரங்களில் ஏனைய மரங்களையும் நடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- மட்டக்களப்பு மாநகரப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்;பதைத் தடுப்பதற்காக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட வடிகாலமைப்பு வலைப்பின்னல் செயல் திட்;டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
- மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் சனத்தொகையும், வீடுகளும் அதிகரிப்பதால் சாக்கடை மற்றும் மலசலகூட கழிவுநீர் அகற்றும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வலைப்பின்னல் செயல் திட்;டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
- மாநகரப் பகுதிகளில் தேவையான இடங்களில் நூல் நிலையங்களையும், சிறுவர் பூங்காக்களையும் அமைப்பதுடன், இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு சாந்தி நிவேதனமாக பிரகாசித்துத் திகழக்கூடிய மட்டக்களப்பு மக்களின் அறிவுக்கருவூலமான நூல்நிலைய கட்டிடத் தொகுதி 2022ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் அறிவுப் பசியைப் போக்கும் பொருட்டு உங்களிடம் கையளிக்கப்படும்.
- மட்டக்களப்பு மாநகரசபை திண்மக்கழிவகற்றும் நடைமுறை மற்றும் திருப்பெருந்துறை திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையம், அங்கு இடம்பெறும் கழிவுகளைத் தரம் பிரித்தல் நடைமுறை, மீள்சுழற்சி நடைமுறைகள், சேதனப் பசளை தயாரிப்பு நடைமுறைகள் அதற்காக வழங்கப்பட்ட உபகரணங்கள், இயந்திரங்கள், வாகனங்களின் பாவனை தொடர்பாகவும், அங்கு இடம்பெறும் நடைமுறைகள், அங்கு அண்டி வாழும் திருப்பெருந்துறை மக்களுக்கும், சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடைபெறுவதை உறுதிப்படுத்திச் சீர் செய்வதற்காகவும் ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல்.
- மாநகரசபையால் நடைமுறைப்படுத்தப்படும் பாதை அபிவிருத்தி, மின்சாரம், நீர்வழங்கல், வடிகாலமைப்பு போன்ற சேவைகள் திறம்பட நடைபெற உதவி புரிதல்.
பூர்வவீகக் குடிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு, மற்றும் வடக்கிலுள்ள தூரப்பிரதேங்களில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிகளுக்கு அவர்களுடைய தனித்துவத்தைப் பாதுகாக்கும் அதேவேளை பாதைகள், பாடசாலைகள், வைத்திய வசதிகள், வாழ்வாதார வசதிகள், அவர்களுக்கான சிறப்பான வணக்க தலங்கள், போக்குவரத்து வசதிகள், வீடமைப்புத் திட்டங்கள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களது கலாசார வணக்க முறைகளுக்கான வசதிகளையும் செய்து கொடுத்தல்.