கட்சியின்‌ அரசியல்‌ கொள்கை

Body

எமது கட்சியானது கிழக்கிலங்கை மக்களின் நீண்டகால அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வரலாற்றுக்கடமையை சுமந்து நிற்கின்றது.எமது கட்சி உறுப்பினர்கள் எமது மக்கள் மீதும் மக்களது ஜனநாயக உரிமைகள் மீதும் உண்மையான நேசம் கொண்டவர்களாவர்.அதன் காரணமாகவே எமது கட்சியின் உருவாக்கம் நிகழ்ந்தநாளில் இருந்து பலநூறு உறுப்பினர்கள் தமது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரது எண்ணங்களினதும் அரசியல் அபிலாசைகளினதும் கருத்தொருமிப்பிலிருந்தே  எமதுகட்சியானது தனது இலக்குகளை வரித்துக் கொண்டுள்ளது

  • இலங்கையின் இறைமையினையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எமது கட்சி போராடும்.
  • இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் சமத்துவ உரிமைகளுக்காக எமது கட்சி உழைக்கும்.
  • கிழக்கு மாகாணத்தின் தனித்துவ அரசியல் சுதந்திரத்திற்காகவும் இன நல்லுறவிற்காகவும் கட்சி பாடுபடும்.
  • எமது தேசத்தின் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் அதனூடாக உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கட்சி முன்னிற்கும்.

மேற்படி எமது கட்சியின் செயற்பாடுகள் ஊடாக இன, மத, மொழி, சாதி, பால், வர்க்க, பிரதேச வேறுபாடுகளை களைந்து இலங்கையை ஒரு மதச் சார்பற்ற நாடாகவும் இலங்கையர்களை ஒரு சமத்துவ சமுதாயமாகவும் உருவாக்குவதே எமது இலக்கு ஆகும்.

இதன் அடிப்படையில் எமது தேசத்து மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் முற்போக்கு மற்றும் சமூகநல அமைப்புகள் புகலிட இலங்கையர் சமூகம் போன்றவற்றோடு இணைந்து செயலாற்ற எமது கட்சி உறுதி பூணுகின்றது.

விரிவான அறிக்கை

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முதலாவது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சியின் அரசியல் கொள்கை அறிக்கை