மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகத்தின் உதைபந்தாட்ட சுற்று போட்டி

மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகத்தின் உயிர்நீத்த உறவுகள் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டி 2024!

மட்டக்களப்பு மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழகமானது 1987 மற்றும் 1991ம் ஆண்டுகளில் உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வானது அக்கழகத்தின் தலைவர் திரு. கிருபாகரன் தலைமையில் மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதிப் போட்டியினை ஆரம்பித்து வைத்ததோடு, இச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய கழகத்தினருக்கான வெற்றிக்கேடயம் மற்றும் பண பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் பெறும் 26 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் காஞ்சிரங்குடா ஆதவன் மற்றும் குருந்தையடி ரென்ஸ்டார் விளையாட்டு கழகங்கள் இறுதி சுற்றுக்கு தெரிவாகி, மோதியிருந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் பெறுபேறுகளை பெறாத நிலையில் போட்டியானது தண்ட உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் கரவெட்டி ஆதவன் விளையாட்டு கழகம் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியனானதோடு குருந்தையடி ரென்ஸ்டார், காஞ்சிரங்குடா நாகஒளி, மகிழடித்தீவு மகிழை விளையாட்டு கழகங்கள், முறையே 2ம், 3ம், 4ம் இடங்களை பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வில் மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ துரை ஆனந்த சங்கர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் ஜமுனாகரன், இளைஞர் கழக உத்தியோகத்தர் தயாசீலன், கொக்கடிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேதெட்ண, சைவப்புலவர் மகேசரெத்தினம், கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் அருட்செல்வம், ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் சாந்தலிங்கம், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் அன்னகேசரி, கட்சியின் அப்பிரதேச குழு தலைவர் காமராஜ், உட்பட படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர், மகிழடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டு கழக முன்னாள் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ