ஆலயங்கள், தேவாலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், இதர அமைப்புக்களுக்கான காசோலைகள் மற்றும் உபகரணங்கள்

30 - 11 - 2021

ஆலயங்கள், தேவாலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், இதர அமைப்புக்களுக்கான காசோலைகள் மற்றும் உபகரணங்கள்.

கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், இதர அமைப்புகளுக்கான காசோலைகள், மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது அரசடித்தீவு ஸ்ரீ விக்னேஸ்வரர், பட்டிப்பளை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களுக்கு காசோலைகளும். பட்டிப்பளை வைரவர் விளையாட்டு கழகம் மற்றும், மகிழடித்தீவு மகிழை விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களும். 40 வட்டை சக்தி விளையாட்டு மைதான புனரமைப்புகான காசோலையும். கொக்கட்டிச்சோலை மயான புனரமைப்பு நிதிக்கான (02ஆம் கட்டம்) காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் தட்ஷனா கௌரி அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் போது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், ம. தெ.மே பிரதேசபை தவிசாளர் புஷ்பலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளை தலைவர் இ. ரமேஷ், பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக்கிளை செயலாளருமான ம.குகநாதன், பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பயனாளிகள் என் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ