மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் 400m சுற்று வட்ட ஓட்ட பாதையினை கொண்ட பாரிய விளையாட்டு மைதானங்கள்.

மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல மைதானங்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனால் புனரமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படக்கூடிய கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு போன்ற தேர்தல் தொகுதிகளில் 400m ஓட்டப் பாதை மற்றும் வலைப்பந்து, கால்பந்து, மென்பந்து போன்ற பல விளையாட்டுக்களை விளையாடக் கூடிய பாரிய விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக முன்னெடுத்துள்ளார்.

இதன் முதற் கட்டமாக அமைக்கப்படும் ஒவ்வொரு விளையாட்டு மைதானங்களுக்குமாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு தொகுதிக்கான விளையாட்டு மைதானத்தினை அமைப்பதற்கான இடத்தினை உறுதிப்படுத்தும் முகமாக நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரடி களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் ஒருசில இடங்களை பார்வையிட்டு கல்லடி வேலூர் பகுதியில் இவ் விளையாட்டு மைதானத்தினை அமைப்பதற்கு தீமானித்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரன், பிரதேச செயலாளர் வாசுதேவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் மற்றும் துறைசார் அதிகாரிகள் இளைஞ்ஞர்கள், பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்