40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்.
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளூர் உற்பத்தினையும் கிராமிய மற்றும் சுயபொருளாதாரத்தினையும் அதிகரிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தினையும் முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் எமது மாவட்டத்திலும் இவற்றை வழங்கி வைக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் இலுப்படிச்சேனை, மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைபவ ரீதியாக தென்னங் கன்றுகளை வழங்கி இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் உத்தியோகத்தர்களுடன் இணைந்து
ஆலய வளாகத்தில் தென்னை நடுகை முறை சம்மந்தமான பயிற்சிகளையும் பயனாளிகளுக்கு வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், எறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, தென்னை பயிற்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி.பிறேமினி ரவிராஜ் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ