வவுணதீவு பொதுச்சந்தை கட்டடத் தொகுதி மற்றும் மண்டபத்தடி பிரதான வீதிக்கான ஆரம்ப நிகழ்வு!
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வவுணதீவு பொதுச்சந்தை கட்டடத் தொகுதி மற்றும் மண்டபத்தடி பிரதான வீதிக்கான ஆரம்ப நிகழ்வு!
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சந்தை கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், மண்டபத்தடி பிரதான வீதியினை கொங்கிரிட் வீதியாக செப்பனிடும் ஆரம்ப நிகழ்வும் பிரதேச சபை செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்திருந்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் 20.54 மில்லியன் நிதியுதவியின் கீழ் இச்சந்தை கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், 05 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்டபத்தடி பிரதான வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சபேஸ், பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கட்சியின் வவுணதீவு பிரதேச குழு தலைவர் கோபிநாதன், செயலாளர் நித்தீஸ்வரன், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மக்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ