23.5 மில்லியன் செலவில் ஒளிமடு கிராமிய பாலம் மற்றும் நெடியமடு உள்ளக வீதி புனரமைப்பு.

18.5 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட ஒளிமடு கிராமிய பாலம், மற்றும் 5 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட நெடியமடு உள்ளக வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் 23.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செப்பனிடப்பட்ட ஒளிமடு கிராமிய பாலம் மற்றும் கிரவல் வீதியாக செப்பனிடப்பட்ட நெடியமடு உள்ளக வீதி என்பன இராஜாங்க அமைச்சரினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் சிவ .சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாய உற்பத்தியினை பிரதான ஜீவனோபாயமாக கொண்ட வவுணதீவு பிரதேசத்தில் கிராமங்களை இணைக்கின்ற கிராமிய பாலங்கள், விவசாய உள்ளீடுகள் மற்றும் உற்பத்திகளை எடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கிய விவசாய வீதிகள் இனங்காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கட்டங்கட்டமாக கையளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அப்பிரதேச விவசாயிகளின் மிக முக்கிய தேவையாக காணப்படுவந்த மேற்படி பாலம் மற்றும் வீதி என்பன செப்பனிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வுகளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் திரு.வானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சபேஷ்,அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவரூபன் கட்சியின் வவுணதீவு பிரதேச குழு தலைவர் கோபிநாதன், செயலாளர் நித்தீஸ்வரன், கிராமிய குழு தலைவர் சசிகரன்,உட்பட கமநல அமைப்புகளின் தலைவர்கள் விவசாயிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ