பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய இல்ல உடல் உள திறனாய்வுப் போட்டி -2024

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் இல்ல உடல் உள திறனாய்வு போட்டியானது வித்தியாலய முதல்வர் திரு வி. யோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.

இதன்போது ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு சத்திய பிரமாணம் நடைபெற்று சம்பிரதாயபூர்வமாக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு , மாணவர்களின் அணிநடை மரியாதை , உடற்பயிற்சி கண்காட்சி என்பனவும் நடைபெற்றது. அத்தோடு கழகங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இதில் கங்கை, சிகரம், கானகம் என இல்லங்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில். விளையாட்டு போட்டிகள், இல்ல சோடனை, அணிநடை என அனைத்து போட்டி நிகழ்வுகளிலும் கானகம் இல்லம் 1ம் இடத்தை பெற்றுக் கொண்டதோடு, இவ்வாண்டுக்கான உடல் உள திறனாய்வுப் போட்டிகளில் 611 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. அத்தோடு சிகரம் இல்லம் 570 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தினையும், 493 புள்ளிகளை பெற்று கங்கை இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் புவனேந்திரன், பழுகாமம் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஜோதிராஜா, மட்டக்களப்பு மேற்கு வலய உதவி கல்வி பணிப்பாளர் ரகுவரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் அருள்ராஜ், கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், பிரதிச் செயலாளர் (இணைப்பாக்கம்) சந்திரகுமார், பிரதேச குழு செயலாளர் பிரசாத் கட்சியின் கனடா கிளை இணைப்பாளர் கண்ணன், உட்பட மத பெரியோர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ