முறக்கொட்டான்சேனை ஞான ஒளி விளையாட்டு கழகத்தின் கிராமிய விளையாட்டு விழா.
முறக்கொட்டான்சேனை ஞான ஒளி விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழாவானது அக்கழகத்தின் தலைவர் திரு. பிரதீபன் தலைமையில் முறக்கொட்டான்சேனை ஞான ஒளி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததோடு, வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
இந் நிகழ்வில் தமிழர் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்க தக்க பல கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது கிராம உத்தியோகத்தர்களான திருமதி நிர்மலா, திரு. கலைராஜ், சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி மணிமேகலை,விளையாட்டு உத்தியோகத்தர் திரு. பிரசாத், நாகதம்பிரான் ஆலய பிரதம பூசகர் இளையதம்பி, பரி. பவுல் ஆலய போதகர் சபிலாஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு கிரான் பிரதேச குழு செயலாளர் சுதர்சன் உட்பட விளையாட்டு கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ