கல்லடி வேலூர் விபுலாநந்தா விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா 2024!

கல்லடி வேலூர் விபுலாநந்தா விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா 2024!

பிறந்திருக்கின்ற தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக கல்லடி வேலூர் விபுலாநந்தா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவானது அக்கழகத்தின் தலைவர் திரு கு. கிருஷ்ணகுமார் தலைமையில் விபுலாநந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததோடு, வெற்றியீட்டியவர்களுக்கான பரிசீல்களையும் வழங்கி வைத்திருந்தார்.

இந் நிகழ்வில் தமிழர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தினையும் பிரதிபலிக்கதக்க வகையில் சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், 400M ஓட்டம், மை முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், நீர் நிரப்புதல், மா மாற்றுதல், முட்டை மாற்றுதல், உள்ளிட்ட சிறுவர், இளைஞர், யுவதிகள் மற்றும் முதியோர்களுக்கான

பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் போது ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், மட்டக்களப்பு மாணகரசபை சிவில் பொறியியலாளர் சித்ராதேவி லிங்கேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் சூ.பிரான்சிஸ், கிராம சேவை உத்தியோகஸ்தர் சேவை சிவில் பொறியாளர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ