ஆர்கலி மற்றும் மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக் கழகங்களின் சித்திரை விளையாட்டு விழா!
கொண்டயன்கேணி ஆர்கலி மற்றும் மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக் கழகங்களின் சித்திரை விளையாட்டு விழா!பிறந்திருக்கின்ற தமிழ், சிங்கள சித்திரை புது வருடத்தை முன்னிட்டு கொண்டயன்கேணி ஆர்கலி விளையாட்டு கழகத்தின் கலாச்சார விளையாட்டு விழாவானது அக் கழகத்தின் தலைவர் திரு க. பத்மசிறி தலைமையில் கொண்டயன்கேணி ஆர்கலி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று மயிலம்பாவெளி வெண்புறா விளையாட்டு கழகம் மற்றும் விநாயகர்புரம் சன சமூக நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சித்திரை விளையாட்டு விழாவானது மயிலம்பாவெளி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று இருந்தது.
இந் நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததோடு, வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசீல்கள் மற்றும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கி வைத்திருந்தார்.
இந் நிகழ்வுகளில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் திரு பற்குணன், மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வர் வித்தியாலய அதிபர் திரு.பாஸ்கரன், வர்த்தகர் திரு. சுதாகரன் கொண்டயன்கேணி பாலமுருகன் ஆலய தலைவர் சிங்கராசா கொண்டயன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் பேரின்பராசா உட்பட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ