50 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடப்பட்ட பாசிக்குடா முனை முருகன் கோவில் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 50 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடப்பட்ட பாசிக்குடா முனை முருகன் ஆலய வீதியினை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் இணைந்து மக்கள் பாவனைக்கு திறந்து வைத்திருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக கல்குடா தொகுதியில் சுற்றுலா மற்றும் மீன்பிடி தொழில்துறையினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இலங்கையின் பிரபல்யமான சுற்றுலா தலங்களில் ஒன்றான பாசிக்குடா பிரதேசத்தில் மிக முக்கிய போக்குவரத்து வீதிகளில் ஒன்றான முனை முருகன் ஆலய வீதியானது கடந்த கால அசாதாரண சூழ்நிலையில் காரணமா அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் போக்குவரத்திற்காக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதியானது விடுவிக்கப்பட்டு காபெட் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, உட்பட ஆலய பரிபாலன சபையினர் கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ