வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துவதற்கான நீடித்து நிலைக்கும் திட்டம்.
வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்துவதற்கான நீடித்து நிலைக்கும் திட்டம்.
காலம்காலமாக மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படுவதை இல்லாமல் ஒளிப்பதற்கான ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளை செய்வதற்காக உலக வங்கியின் அனுசரணையுடன் பிரான்ஸ் நாட்டு Egis நிறுவனம் அந்த ஆய்வை செய்வதற்காக அமர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்த நிபுணத்துவ நிறுவனம் அதற்கான ஆய்வுகளையும், களப்பரிசோதனைகளையும் மேற்கொண்டு தங்களது சாத்தியவள அறிக்கையை தயாரித்தது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலங்காலமாக ஏற்படும் வெள்ள பெருக்கத்திற்கான காரணங்களையும் அதைப் போக்குவதற்கான பரிந்துரைகளையும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இது சம்பந்தமாக இந்த ஆய்வில் ஈடுபட்ட பொறியாளர்களுக்கான சான்றிதள்கள் வழங்கும் வைபவமும் பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது நீர்ப்பாசன திணைக்கள மேலதிகப்பணிப்பாளர் உள்ளடங்கலான குழு அந்த ஆய்வறிக்கையை கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் வைபவ ரீதியாக கையளித்தது.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களைஅரசாங்கத்தினதும், வெளிநாடுகளினதும் நிதி உதவிகளைக் கொண்டு விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ