21 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட திமிலை தீவு டானியல் வீதி
21 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திமிலை தீவு டானியல் வீதியினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களுடன் இணைந்து பெருந்தெருக்கள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபாலகம்லத் அவர்கள் மக்கள் பாவனைக்காக நேற்றையதினம் திறந்து வைத்திருந்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய குழு தலைவர் மதி ரூபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ. பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் S.சுரேஷ்குமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ