கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள 2km உள்ளக வீதி, பெரிய கல்லாறு உள்ளக வீதி, நொச்சிமுனை சமிக்ஞை விளக்கு என்பன நேற்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள 2km நீளமான உள்ளக வீதியானது அப்பிரதேச மக்களினதும் கோவில் நிருவாகத்தினரதும் வேண்டுகோளுக்கமைவாக இவ்வருட கோவில் மகோற்சவத்திற்கு முன்னதாக மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வண்ணம் பல மில்லியன் செலவில் செப்பனிடப்பட்டு நேற்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ Dr பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள குறித்த 2km நீளம் கொண்ட உள்ளக வீதிகளானது ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் செப்பனிட தீர்மானித்திருந்த போதும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் நிலவி வரும் இவ் இக்கட்டான சூழலிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வீதிகள், உலக வங்கியின் நிதி உதவியுடனும், அரசின் நேரடி பங்களிப்புடனும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி (02KM) இரண்டு கிலோமீட்டர் உள்ளக வீதிகளும் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் இணைந்ததாக நேற்றைய தினம் கார்பெட் வீதியாக புனரமைக்கப்பட்ட பெரியகல்லாறு உள்ளக வீதி மற்றும் விழிப்புலனற்றோர் சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்லடி நொச்சிமுனை பகுதியில் அமைக்கப்பட்ட வீதிச் சமிக்ஞை விளக்கு போன்றவற்றையும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ Dr பந்துல குணவர்த்தன அவர்களுடன் இணைந்து கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ சிவ சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.
நிகழ்வுகளின் போது பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜிவரன், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ