மட்டக்களப்பு காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டி

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகத்தின் 13 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியானது அக் கழகத்தின் தலைவர் வீரசிங்கம் ரசிக்குமார் தலைமையில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்ததோடு பணப்பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தார்.

அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான குறித்த உதைபந்தாட்ட சுற்று போட்டி நிகழ்வில் 29 அணிகள் பங்கு பற்றி இருந்த போதிலும் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகத்தினரும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிலையில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தினர் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் 5 வது முறையாக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மட் /காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியால அதிபர் S.சுந்தரமோகன் ,கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர், ஆலய பரிபாலன சபை தலைவர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ