தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மாபெரும் மே தின எழுச்சிப் பேரணி மற்றும் நிகழ்வுகள்.

வியர்வைத்துளியை உரமாக்கி வெற்றியை உழைப்பாக்கும் தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக ''வியர்வை துளியில் வெற்றி'' எனும் தொனிப் பொருளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தொழிற்சங்க ஏற்பாட்டில் தொழிற்சங்க செயலாளர் சோமசுந்தரம் தியாகராஜா அவர்கள் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானம்வரை இடம்பெற்ற மாபெரும் மே தின எழுச்சிப் பேரணி மற்றும் பெரும்திரளான மக்கள் குழுமத்துடன் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பங்கு பற்றி தொழிற்துறைகளிலும் தமது அர்பணிப்பினூடாக சாதனைகளை வெளிப்படுத்திய தொழிலாளர்களை கௌரவைத்ததுடன் தொழிற்சங்க பேரணியின் போது தமது பிரதேசங்களின் தொழிற்சங்க பலத்தினையும், ஒற்றுமையினையும் காண்பிக்கும் விதத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் ஊர்திகளை ஒழுங்கு செய்திருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரதேசமட்ட தொழிற்சங்க உறுப்பினர்களையும் கௌரவ படுத்தியிருந்தார்

குறித்த நிகழ்வின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் , செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், போராளிகள், பொது மக்களென பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக குறித்த மாபெரும் எழுச்சி பேரணி மற்றும் நிகழ்வுகளானது முழுக்க முழுக்க கிழக்கு மாகாணம் பூராகவும் பரந்து வாழும் ஒவ்வொரு தொழிலாளர்களினதும் நிதிப்பங்களிப்புடன் மிக சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் அந்த நிதிப்பங்களிப்பினை நல்கிய தொழிலாளர்களுக்கும், உணர்வுபூர்வமாக குறித்த பேரணி மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்ற தொழிலார்களுக்கும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ