நிப்போன் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

நிப்போன் கராத்தே சம்மேளனத்தினால் (Nippon Karate Association) நடாத்தப்பட்ட நிப்போன் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 16.02.2023 அன்று இடம்பெற்ற குறித்த நிப்போன் கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையிலுள்ள 9 மாகாணங்களைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது கிழக்குமாகாணத்திலிருந்து S. K . O கராத்தே கழகம் சார்பில் 13 கராத்தே வீரர்கள் பங்குபற்றி 08 தங்கம், 08 வெள்ளி, 06 வெண்கலம் உள்ளடங்கலாக 22 பதக்கங்களை வெற்றி பெற்றிருந்தனர்.

அந்த வகையில் குறித்த வீரர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 18/ 02/ 2023 அன்று S. K . O கராத்தே கழக தலைவர் K. T பிரகாஷ் அவர்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீரர்களுக்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்திருந்தார். மேலும் S. K . O கராத்தே கழகத்தில் முறையாக பயிற்சி பெற்ற 75 மாணவர்களுக்கான தரப்படுத்தல் சான்றிதள்களும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ