ஆழிப்பேரலை கோரதாண்டவம் ஆடிய 18 வது ஆண்டு நினைவு நாள்

இற்றைக்கு 18 வருடங்களுக்கு முன்னர் இதே 26 ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை களிப்பு முடிவடைவதற்கு முன்னரே அதிகாலை 08.50 மணியளவில் எம் உறவுகள் மீது அத்துமீறிப்பாய்ந்த பேரலை கோரதாண்டவம் ஆடி பேரழிவை ஏற்படுத்தி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இப்பதினெட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளின் போது எம் உறவுகளுடன் உறவுகளாக கலந்துகொண்ட தருணமிது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ. இந்திரகுமார் பிரசன்னா, கௌரவ. துரைரெட்ணம், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் உதவிப்பணிப்பாளர் யுவநாதன் போன்றோர் உள்ளடங்கலாக உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ