திருகோணமலை கன்னியா கருமாரியம்மன் கோயில் வீதி திறப்பு விழா!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 11 மில்லியன் செலவில் கார்பெட் வீதியாக செப்பனிடப்பட்ட , திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கன்னியா கருமாரியம்மன் கோயில் வீதியின் திறப்பு விழா தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு. நளினகாந்தன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் இணைந்து நேற்றைய தினம் மக்கள் பாவனைக்கு திறந்து வைத்திருந்தனர்.

குறித்த வரலாற்று சிறப்பு மிக்க கருமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகமானது நடைபெறவுள்ள நிலையில் இவ்வீதியினை செப்பனிட்டு தருமாறு ஆலய பரிபாலன சபையினர், கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஊடாக இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வீதியானது இராஜாங்க அமைச்சின் 11 மில்லியன் செலவில் கார்பெட் வீதியாக செப்பனிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரள, நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார், உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ