வவுணதீவு பிரதேசத்தில் இரு மைதானங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைப்பு!

கரவெட்டி ஆதவன் மற்றும் குருந்தையடிமுன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டு கழகங்களின் மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் புனரமைக்கப்படவுள்ள குருந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டு கழக மைதான புனரமைப்பு பணிகளையும், ஆதவன் விளையாட்டு கழக மைதானத்திற்கான வரவேற்பு வளைவு கோபுர நிர்மான பணிகளையும் இராஜாங்க அமைச்சர் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும் இதன் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் “மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்” எனும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக கிரவல் வீதியாக செப்பனிடப்பட்ட கரவெட்டி நெல்லிச்சேனை மைதான வீதியினையும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திரு.யோகராசா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சபேஷ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் பிரதேச குழு தலைவர் கோபிநாதன், செயலாளர் நித்திஷ்வரன் கிராமிய குழு தலைவர்கள் விஷ்ணுகாந்தன் மற்றும் தினேஷ் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் விளையாட்டு கழக வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ