புன்னக்குளம் பிலாலிவேம்பு வாணி தமிழ் வித்தியாலய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு!
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னக்குளம் பிலாலிவேம்பு வாணி தமிழ் வித்தியாலய விளையாட்டு மைதான திறப்பு விழாவானது கிராமியக் குழு தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தினை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக நேற்றைய தினம் திறந்து வைத்திருந்தார் .
பிலாலிவேம்பு வாணி தமிழ் வித்தியாலயத்தின் அடிப்படை வளப்பற்றாக்குறையாக விளையாட்டு மைதானமின்மை காணப்பட்டு வந்தது. எனவே குறித்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்களால் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரன்காந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த மைதானமானது இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக நிதி பங்களிப்பின் ஊடாக புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஜீவானந்தராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், பிரதிச் செயலாளர் (இணைப்பாக்கம்) சந்திரகுமார், பாடசாலை அதிபர் ஜெயரதன், கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச குழு செயலாளர் பிரசாத், கட்சியின் கனடா கிளை இணைப்பாளர் கண்ணன்,கிராம உத்தியோகத்தர் இம்சன் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ