மாவீரர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து மரணித்த மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு முன்னர் மரணித்த மாவீரர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியே பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் இருந்தும் பல மாவீரர் குடும்பங்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக எம்மிடம் பல முறைப்பாடுகளை முன்வைத்தனர். விடுதலைப் போராட்டத்தில் எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களை துச்சமென நினைத்து போராடி விதையாகிபோன எமது மாவீர்களின் குடும்பங்கள் இன்று வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என்றும் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள், விடுதலைப் போராட்டத்தின் மூலம் பதவிகளைப் பெற்றவர்கள், விடுதலைப் போராட்டத்தின் போது தேசியம் கதைதவர்கள் இவர்களில் யாரும் இந்த மாவீர்ர் குடும்பங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் கடந்தகாலத்தில் நாங்கள் மாகண சபையில் இருந்த போது கிடைத்த உதவிகளுடன் மாத்திரமே தாங்கள் தமது வாழ்க்கையினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் பல முக்கியமான பொறுப்புகளை வகித்த தளபதிகளின் குடும்பத்தினர் மற்றும் போராட்டத்தின் போது களத்திலிருந்து மரணித்த குடும்பங்களின் உறவினர்களை சந்தித்த பொழுது அவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டின் கீழ் வாள்வதுடன் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதை எம்மால்உணர முடிந்தது.

எனவே இது தொடர்பில் எம்மால் மாவீரர் குடும்பங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட குழாமிடம் இருந்து அனைத்து விவரங்களும் சேமிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு செய்யக்கூடிய அனைத்து செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுகின்றோம்.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப