அரசடித்தீவு இளங்கதிர் கலாமன்ற நிர்வாகிகளுடனான விசேட சந்திப்பு!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களுக்கும் அரசடித்தீவு இளங்கதிர் கலாமன்ற நிர்வாகிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இராஜாங்க அமைச்சரின் பிராந்திய காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதன் போது அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் காணப்படும் கலையரங்கின் திருத்த வேலைகள், உடை அலங்கார கட்டட புனரமைப்பு, மலசல கூட நிர்மாணிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் இளங்கதிர் கலாமன்ற நிர்வாகிகளால் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

மேலும் இளங்கதிர் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கலை கலாசார சமூக மேம்பாடு விடையங்கள் சம்மந்தமாகவும் ஆராயப்பட்டிருந்தது, இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பில் முனைப்பான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது பட்டிப்பளை பிரதேச குழு தலைவர் ம. குகநாதன், செயலாளர் சபேசன், இணைப்பாளர் தங்கதுரை, இளைஞர் அணி செயலாளர் புலக்சன், இளங்கதிர் கலாமன்ற தலைவர் பேரின்பராசா உட்பட மன்ற நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ