கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவானது வித்தியாலய அதிபர் திரு அருமைத்துரை அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலினை திறந்து வைத்ததுடன்,பாடசாலை பெயர் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்திருந்தார்.

700 மாணவர்கள் கல்வி பயிலும் நகரின் மத்தியில் அமைந்துள்ள இப் பாடசாலையில் இடப்பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக காணப்பட்டு வந்ததோடு, குறித்த பாடசாலைக்கான காணியினை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை சமூகத்தினால் பல்வேறு வகையிலும் முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும், காணியினை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்பட்டதோடு, அரசியல் வாதிகளினால் தொடர் இழுத்தடிப்பும் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட பாடசாலையின் கல்வி சமூகத்தினரால் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சரின் நிர்வாக ரீதியான முன்னெடுப்பு காரணமாக பாடசாலை வளாகத்தின் அருகில் காணப்பட்ட ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயன்படுத்தப்படாமல் இருந்த காணியானது பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை வளாகத்திற்கான எல்லைச் சுவர் மற்றும் புதிய நுழைவாயில் என்பன நிர்மாணிக்கப்பட்டு வைபவ ரீதியாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகவும்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி கரண்யா சுபாகரன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக பொறியியலாளர் சுரேஷ்குமார், இராஜாங்க அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு. ஜீவன்ராஜ், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ஜே பிரபாகரன், கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய நிறைவேற்று அபிவிருத்தி குழு செயலாளர் முகுந்தன், பழைய மாணவர் சங்க செயலாளர் பெனடிக் ருஷாந்தன், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ