மாவடியோடை அணைக்கட்டு வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக செப்பனிடப்பட்ட 11.5km நீளமான மாவடியோடை அணைக்கட்டு வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது அண்மையில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து குறித்த வீதியினை வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தனர்.
இலுப்படிச்சேனை சந்தி தொடக்கம் வேப்பவெட்டுவான் மாவடியோடை ஊடாக ஈரளக்குளம் பிரதேசத்திற்கான பிரதான போக்குவரத்து வீதிகளில் ஒன்றான இவ்வீதியானது செப்பனிடப்பட்டுள்ளதன் காரணமாக, பன்னெடுங்காலமாக இவ் வீதியினூடாக தங்கள் விவசாய நிலங்களுக்கான உள்ளீடுகள் மற்றும் விளை பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற விவசாய நடவடிக்கைகளின் போது சிரமங்களை எதிர்கொண்டு வந்த அப்பிரதேச விவசாயிகளும், பண்ணையார்களும் இதன் மூலம் நன்மை அடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, உட்பட கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ