50 மில்லியன் செலவில் புன்னக்குளம் நாகதம்பிரான் கோவில் வீதி காப்பெட் வீதியாக செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட புன்னக்குளம் நாகதம்பிரான் கோவில் வீதியானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 50 மில்லியன் செலவில் காப்பெட் வீதியாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையாளிக்கும் நிகழ்வானது கட்சியின் கிராமிய குழு தலைவர் திரு. மகேந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீதியினை வைபவரீதியாக திறந்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் மாதுளன், பட்டிருப்பு உதவி கல்வி பணிப்பாளர் ஜீவானந்தராஜா, கட்சியின் பிரதிச் செயலாளர் சந்திரகுமார், பிரதேசக் குழு செயலாளர் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ