கதிர்காமம் புனித பாதயாத்திரியர்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்கி வரும் சிவதொண்டர் அமைப்பிற்கான எரிபொருள் வழங்கி வைப்பு.
உலக இந்துக்களின் பிரசித்தி பெற்ற திருத்தலமான கதிர்காமம் முருகப்பெருமான் ஆலயத்தை நோக்கிய 2024 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (30) ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகவுள்ளது.
அந்த வகையில் புனித பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள பக்தர்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வரும் தொண்டர் அமைப்புகளுக்கான எரிபொருளானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவதொண்டர் அமைப்பிற்கான 335 லிட்டர் டீசல் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் நேரடி நிதி பங்களிப்பின் ஊடாக, குறித்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டரமைப்புகளுக்கான எரிபொருள் வருடாவருடம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ