திருகோணமலை சேருவில பெரேஹர மாவத்தை வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடு பூராகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய வீதிகள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான வீதிகள் முன்னுரிமை அடிப்படையில் செப்பனிட்டு கட்டங்கட்டமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 75 மில்லியன் செலவில் கார்பெட் வீதியாக செப்பனிடப்பட்ட 1.3km நீளமான திருகோணமலை சேருவில பெரேஹர மாவத்தை வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரள தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் இணைந்து நேற்றைய தினம் மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தனர்.
இந் நிகழ்வில் விஹாரபதி வண உடுகம புத்தரக்கித தேரர், நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார், பொறியிலாளர் திரு. ரஞ்சித் குமார் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ