கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விசேட மீளாய்வுக் கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் மணல் வீதியை கிறவல் வீதியாக மாற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அதிகம் உபயோகிக்கும் மணல் வீதிகளை கிரவல் வீதிகளாக மாற்றும் வீதி புனரமைப்பு பணிகளானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குறித்த திட்டமானது பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் கேட்டறிய பட்டதோடு, அவற்றை நிவர்த்தி செய்து பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தனால் இதன்போது வழங்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து வீதி புனரமைப்பு பணிகளையும் எதிர்வரும் ஜூன் மாத இறுதி பகுதிக்குள் முடிவுறுத்துவதட்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சரினால் இதன் போது

பணிப்புரையும் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மணல் வீதிகள் அற்ற கிராமங்கள் எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் வீதிகளை கிரவல் வீதிகளாக மாற்றும் திட்டத்திற்காக முதல் கட்டமாக 400 மில்லியன் செலவில் 50 கிலோமீட்டர் வீதிகள் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்க பட்டுள்ளதுடன் .

இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் செலவில் 60 கிலோமீட்டர் வீதிகளை செப்பனிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். எம். பஷீர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார்,பிரதேச செயலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ