ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் பாதணிகள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

வித்தியாலய அதிபர் திருமதி மணிவண்ணன் சுதாகரி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான அருண் திருநாவுக்கரசு பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பொருட்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏறாவூர் நகர் பிரதேசக் குழு தலைவர் அன்ரனி, ஆலய பரிபாலன சபை தலைவர் குமார், உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ