மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய வெளிமண்டப நிர்மான பணிகளுக்கு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் நிதி ஒதுக்கீடு.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய வெளிமண்டப நிர்மான பணிகள் நடைபெற்று வருகிறது.

இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச கிளை ஊடாக மாவடிமுன்மாரி வயல் முருகன் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி ஆலயத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 07 மில்லியன் செலவில் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ் தலங்களுக்கான உட்கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மேலும் அதனோடு இணைந்ததாக பல்வேறு வாழ்வாதார உதவித்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ