புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் JEYA_DEVA சவால் கிண்ணம் - 2023 உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் JEYA_DEVA சவால் கிண்ணம் -2023 ற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது அக் கழகத்தின் தலைவர் மயில்வாகனம் கெமில்ட்டன் தலைமையில் நேற்றையதினம் மட்/ இந்துக்கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

JEYA_DEVA சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில் 38 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்த போதிலும் இறுதிப்போட்டியில் டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழகத்தினரும்

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தினரும் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய நிலையில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு கழகத்தினர் முதலிடத்தை தன்வசப்படுத்திக்கொண்டனர்.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாளாகிய நேற்றையதினம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தார்.

அத்துடன் குறித்த விளையாட்டு கழகத்தின் சார்பாக தேசிய ரீதியில் சாதனை படைத்த வீரர்களுக்கு நினைவுச்சின்னங்களையும் வழங்கி கெளரவித்திருந்தார்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. நல்லையா பிரபாகரன், மட்/ இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் திரு. கணபதிப்பிள்ளை பகிரதன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் இந்துக் கல்லூரி மைதானத்தில் இப்படி ஒரு சுற்றுப் போட்டி நடைபெற வேண்டும் என விருப்பம் கொண்டு அதை நிறைவேற்ற (global ksc) அமைப்பின் பிரதிநிதியாக கனடாவிலிருந்து வருகை தந்த கழகத்தின் சிரேஸ்ட்ட உறுப்பினர் ரமேஷ் கண்ணா அவர்கள் உட்பட மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ