விழிப்புணர்வற்றோர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள எமது மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேசரீதியில் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் விழிப்புணர்வற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கை தேசிய அணித் தேர்வு அண்மையில் இடம்பெற்றது. 17 பேர் கொண்ட அவ் அணியில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யோகராசா மற்றும் மோகன்ராஜ் ஆகிய இரு வீரர்கள் மட்டக்களப்பு கல்லடி உதயம் விழிப்புணர்வற்றோர் சங்கத்திலிருந்து தேர்வாகி எமது மண்ணிற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் உதயம் விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக எமது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவ்விருவீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கட் போட்டிக்காக இந்தியா செல்வதற்கு தன்னாலான நிதி உதவிகளையும் வழங்கி வைத்திருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ