முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2024!

மட்டக்களப்பு முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகமானது தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், தமது கிராமத்தில் உயிரிழந்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது அக்கழகத்தின் தலைவர் திரு பு. தனராசா தலைமையில் இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டியில் வெற்றியீட்டிய அணியினருக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப் பரிசில்களை வழங்கி வைத்திருந்ததோடு அக்கழகத்தின் சிரேஷ்ட வீரர்களுக்கான நினைவு சின்னங்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து 36 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இப்போட்டியில் கூழாவடி டிஸ்கோ விளையாட்டு கழகம் 01ம் இடத்தினையும், 02ம் இடத்தினை கரையாக்கன்தீவு காந்தி ஸ்டார் விளையாட்டு கழகமும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு மானகப்போடி, வீரபத்திர சுவாமி ஆலய பிரதம குரு சதுசன், சாரதா வித்தியாலய அதிபர் நிக்லஷ், கட்சியின் பட்டிப்பளை பிரதேச குழு செயலாளர் ம.குகநாதன், அரசியல் துறை செயலாளர் ச.சபேசன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகிகள், நடுவர் சம்மேள நிர்வாகிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஒளிக் கல்லூரி, துளி அருவி, எழுதழிர், கடல் கடந்த முனையின் கரங்கள், உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், உட்பட விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ