02 KM நீளமான களுமுந்தன்வெளி பிரதான வீதியை செப்பனிட நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad project) செப்பனிடும் பணிகள் தடைப்பட்டிருந்த வீதிகளின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், மேலும் முக்கிய பிரதான வீதிகளை குறித்த திட்டத்தினுள் உள்வாங்கி செப்பனிடுவதற்குமான விசேட கருத்திட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 02 KM நீளமான களுமுந்தன்வெளி ஊடாக தும்பங்கேணி வரையிலான பிரதான வீதியினை செப்பனிடுவது தொடர்பான கள விஜயத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் சகிதம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் களுமுந்தன்வெளி கிராமத்தில் மிக முக்கிய போக்குவரத்து வீதியாக காணப்படும் குறித்த வீதியின் பணிகளை துரிதகதியில் ஆரம்பிப்பதற்கான சாத்திய வள நிலைமைகள் தொடர்பாக நேரில் ஆராந்திருந்ததோடு குறித்த கிராம மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டிருந்தார். இதன் போது களுமுந்தன்வெளி கிராமத்தில் நிலவும் பல்வேறு அடிப்படை தேவைகள் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனுடன் இணைந்ததாக போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பழுகாமம் தொடக்கம் தும்பங்கேணி பிரதான வீதி, முனைத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை வீதி, பட்டிருப்பு வெல்லாவெளி பிரதான வீதி உட்பட முக்கிய பல பிரதான வீதிகள் செப்பனிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கள விஜயத்தின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்ட பொறியியலாளர் மயூரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் போரதீவு பற்று பிரதேச குழு செயலாளர் கோபாலன் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன், மண்முனை தென்மேற்கு பிரதேச குழு செயலாளர் குகநாதன், இணைப்பாளர் தங்கத்துரை, ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள், கட்சியின் கிராமிய மட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ