தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதனை புரிந்தோருக்கு கௌரவம்.

2023 ஆம் ஆண்டு மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் கராத்தே மற்றும் தாய்வுண்டோ போட்டிகளில் வெற்றியீட்டிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலையில் SKO கழக தலைவரும் பிரதான போதனாசிரியருமான K.T.பிரகாஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களை கெளரவித்திருந்ததுடன் தேசிய மற்றும் மாகாண ரீதியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு அமைச்சரினால் கராத்தே உபகரண தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்டத்தில் சாதனை புரிந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 பாடசாலைகளைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகளும், தேசிய மட்டத்தில் 12 பதக்கங்களை பெற்ற சாதனையாளர்களும் , 22 ஆவது மூத்தோருக்கான கோலூன்றி பாய்தல் நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற பீ.ஜெயகுமார் உள்ளிட்டோருக்கும் அதேபோன்று 2023 இல் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் சிறந்த பெறு பேறுகளை பெற அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கராத்தே மற்றும் தாய்வுண்டோ பயிற்றுவிப்பாளர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இதன் போது உரையாற்றிய SKO கழக தலைவரும் பிரதான போதனாசிரியருமான K.T.பிரகாஷ் குறிப்பிடுகையில் 15 வருட காலமான கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் ஊக்குவிப்புடன் கூடிய வழிகாட்டலும் திட்டமிடலுமே கராத்தே மற்றும் தாய்வுண்டோ விளையாட்டுக்களில் மட்டக்களப்பு மாவட்டம் இவ்வாறான சாதனைகளை புரிவதற்கு காரணம் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ