கிராமிய தொழிற் துறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு களவிஜயம்..
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு கிராமிய தொழிற் துறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் களவிஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது மேற்படி திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசினால் குறித்த திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட கைத்தொழில் உபகரணங்களின் தற்போதைய நிலமை தொடர்பிலும் அவதானித்து பயன்படுத்தாமல் இருக்கும் உபகரணங்களை உச்ச எல்லை வரை பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருமான மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த விஜயத்தின் போது கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கவிதா, கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் கே.இளங்குமுதன், மாவட்ட உதவிப் பிரதேச செயலாளர் நவேஸ்வரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் யதீஸ் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ