இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கலாச்சார விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும்!
பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழகத்தின் 36வது ஆண்டு நிறைவினையும், சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விளையாட்டு விழாவும், மாபெரும் இன்னிசை இசை நிகழ்ச்சியும் அக்கழகத்தின் தலைவர் திரு ந. நிமல்றாஜ் தலைமையில் இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு, கல்வித்துறையில் சாதனை படைத்த சாதனையாளர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
இதன்போது எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலை கலாசார விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் இன்னிசை இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் திரு நா. திரவியம் (ஜெயம்) முன்னாள் தவிசாளர் திரு. ஸோபா ஜெயரஞ்சித், சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் திரு. கதிர்காமநாதன்,ஓய்வு நிலை அதிபர் த.சந்திரலிங்கம், கவிஞரும் சமூக சேவகருமான திரு. துரை வில்சன் உட்பட அதிபர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் இளந்தளிர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமிய குழு நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ