சிவப்பு சித்திரை தினத்தை முன்னிட்டு எல்லே விளையாட்டு நிகழ்வு 2024.
வெருகல் மலை பகுதியில் நடந்த சகோதர படுகொலையின் போது கிழக்கின் தனித்துவமான இருப்பிற்காக மடிந்த மறவர்களை நினைவு கூறும் வெருகல் படுகொலை "சிவப்பு சித்திரை" நினைவு தினம் எதிர்வரும் ஏப்ரல் 10, 2024 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளமையை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மாபெரும் எல்லே விளையாட்டு போட்டி நிகழ்வானது மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருஸ்தாஸ் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் குழு கட்டமைப்பு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 16 பேர் கொண்ட 09 அணிகள் பங்குபற்றிய 40 பந்து பரிமாற்றங்களை கொண்ட குறித்த எல்லே சுற்றுப்போட்டி நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன்போது போரதீவுப் பற்று மற்றும் கோறளைப் பற்று கிரான் பிரதேச அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதிப் போட்டி நிகழ்வுகள் சிவப்பு சித்திரை நினைவு தினமான எதிர்வரும் 10ம் திகதி வாகரை வம்மிவட்டுவான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியானது ஆற்றல் மிக்க பெண் தலைமைத்துவங்களை உருவாக்கும் நோக்கிலும் வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு மாணவச் செல்வங்களின் கல்வி துறை சார்ந்து தாயாக கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டத்தினையும் முன்னெடுத்திருந்தது. அத்தோடு யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் பெண்கள் மற்றும் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல்வேறு கருத்திட்டங்ளை முன்னெடுத்தும் வருகின்றது.
சிவப்பு சித்திரை நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு வாகரை பிரதேசத்தை மையப்படுத்தி கரப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விளையாட்டு நிகழ்வின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் சந்திரகுமார், தேசிய அமைப்பாளர் தஜுவரன், மாவட்ட அமைப்பாளர் அருன் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர், யுகநாதன், உட்பட தலைவர் பணிக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதேச குழு நிர்வாகிகள், கிராமிய குழு நிர்வாகிகள் விளையாட்டு அணிகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ