64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 64 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி சல்லித்தீவு வீதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது கட்சியின் பிரதேச குழு தலைவர் மதிவேந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் இணைந்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்தனர்.
இப்பிரதேசத்தை சுற்றுலாத்துறை சார்ந்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் வலுப்படுத்த முடியும் எனும், இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருதிட்டத்திற்கு அமைவாக பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு அங்கமாக சுற்றுலா துறைசார்ந்தும், மீன்பிடி மற்றும் ஏனைய கைத்தொழில் துறைசார்ந்தும் பங்களிப்பு செய்யக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் குறித்த வீதியானது காபெட் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ரூபசிங்க, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஜீவானந்தம், கட்சியின் பிரதித்தலைவர் நாகலிங்கம் திரவியம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு. சிவகுமார்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நிறைவேற்று பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, கல்குடா தொகுதி அமைப்பாளர் ஜினித்திரராசா, உட்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராமிய குழு நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ