2.4மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை கண்டலடி மீன்பிடி துறைமுக பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வீதிகள் மற்றும் பாலங்கள் போன்றன முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மீனவர்களின் முக்கிய தேவையாகவும் மிக நீண்ட கால பிரச்சினையாகவும் காணப்பட்ட வாகரை கண்டலடி துறைமுக பாலமானது 2.4மில்லியன் செலவில் செப்பனிடப்பட்டு சம்பிரதாய பூர்வமாக நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வில் கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் ஜீ.அருணன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எந்திரி லிங்கேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஜினித்திரராசா, கட்சியின் வாகரை பிரதேசக் குழு தலைவர் மதிவேந்தன், வாகரை வடக்கு கிராமிய குழு தலைவர் ஜெயக்குமார் உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ