மண்முனைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 15 பாடசாலைகளை உள்ளடக்கியதான விசேட கலந்துரையாடல் அண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடலில் மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அடைவு மட்டத்தினை அதிகரிக்க முன்னெடுக்க கூடிய வழிமுறைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல், மாணவர்களிடையே காணப்படும் போதை பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான முனைப்பான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.
அதனுடன் இணைந்ததாக பாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் தொடர்பிலும் இணைபாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதன்போது பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ