எல்லைப்புற கிராம பாடசாலையான முறுத்தானை முருகன் வித்தியாலயத்திற்கான கற்றல் உபகரணங்கள்.
எமது மாவட்டத்தில் ஆதிக்குடிகள் வாழும் எல்லைப்புற கிராமங்களை பலப்படுத்தும் முகமாக அக்கிராமங்களிலுள்ள மக்களை அறிவுசார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் வலுப்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியாலும், அதன் தலைவர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கோறளைப்பற்று தெற்கு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முறுத்தானை முருகன் வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்