மட்டக்களப்பு கல்லடி முகத்துவார அகழ்வு பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு ,மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கடுக்காமுனை ,பண்டாரியாவெளி ,படையாண்டவெளி, படையாண்டகுளம் ,சேவகப்பற்று, கல்லடிமுனை, பட்டிப்பளை, பிரதர்மார் கண்டம், காஞ்சிரங்குடா வடக்கு, வவுணதீவு ,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள எட்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அழிவுறும் அபாய நிலையில் உள்ளமையினை விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு இணங்க வெள்ள நீர் வடிந்தோடும் முகமாக மட்டக்களப்பு முகத்துவாரத்தினை அகழ்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரப் பகுதியானது தற்பொழுது அகழப்படவிருக்கின்றது. அதன் காட்சிகளையே தற்பொழுது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ