நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தின் போது குறிப்பாக எமது மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டு அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தின் விவசாயிகள் எதிர் கொள்ளும் நீர் பிரச்சினை தொடர்பாகவும், குளங்கள் தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க யானை வேலிகளை அமைப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மிக விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின் போது கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், நஸீர் அஹமட் உட்பட ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகளும் பிரசன்னமாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் உட்பட துறைசார் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ