கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ. அனுராதா யகம்பத் அவர்களுடனான விசேட சந்திப்பு.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ. அனுராதா யகம்பத் அவர்களை சந்தித்து மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக நிலைமைகள், விவசாய உற்பத்தி, சேதனப் பசளை ஊக்குவிப்பு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல அடம்பனை கிராமத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்று முடிந்த கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வை மேற்பார்வை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி திட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் என்ற வகையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினையும் சந்தித்திருந்தார். அதன்போது குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் அரசாங்க அதிபரால் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்