ஈஸ்டர் படுகொலை (இன மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்) நூல் அறிமுக விழா

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களால் எழுதப்பட்டு கடந்த மார்ச் 23 அன்று சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றத்தினால் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்ட ஈஸ்டர் படுகொலை இன மத நல்லிணக்கம் ஆறிதலும் புரிதலும் நூல் அறிமுக விழாவானது சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றத்தின் ஏற்பாட்டில், காரைதீவு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. திரு. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலாசிரியரும், இராஜாங்க அமைச்சருமான சிவ. சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

சம்பிரதாய பூர்வ ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையை சண்முகா வித்தியாலய அதிபர் மணிமாறன் அவர்களும்,தலைமையுரையை கட்சியின் காரைதீவு அமைப்பாளர் ஞானேந்திரன் அவர்களும், கௌரவ அதிதி உரையினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி லிங்கேஸ்வரன் அவர்களும், நூல் அறிமுக உரையினை சந்திரோதயம் கலை இலக்கிய மன்ற தலைவர் மணிசேகரன் அவர்களும், ஆற்றியிருந்தனர். கருத்துரையினை எழுத்தாளர் நீலாவணை இந்திரா அவர்களும், சிறப்புரையினை காரைதீவு மத்திய கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் அவர்களும் ஆற்றியிருந்ததோடு, ஏற்புரையினை நூலாசிரியரும், இராஜாங்க அமைச்சருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களும், நன்றியுரையினை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பூபாலரெட்ணம் அவர்களும் ஆற்றியிருந்தனர்.

அத்தோடு மஞ்சுலேஸ்வரி நர்தநாலைய மாணவிகளின் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததோடு, நடந்து முடிந்த க .பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இராஜாங்க அமைச்சரால் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் சித்தானை குட்டி ஆலய தலைவர் நகுலேஸ்வரன், கவிஞர் காரை சுதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தயாபரன்,காரைதீவு விளையாட்டு கழக தலைவர் சுரேஷ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், பிரதம பொருளாளர் ஆ.தேவராசா, பிரதி செயலாளர் (இணைப்பக்கம்) சந்திரகுமார் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் இளைஞர் அணி செயலாளர் ச.சுரேஷ்குமார், கல்வி கலை கலாச்சார செயலாளர் மணிசேகரன், தொழிற்சங்க செயலாளர் தியாகராஜா, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, கனடா கிளை இணைப்பாளர் கண்ணன் உட்பட எழுத்தாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ